சென்னை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த வழக்கு சம்பந்தமாக கல்லூரி மாணவர் விக்னேஷ் இன்று போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய மாங்காடு போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.


தமிழ்நாட்டில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த சம்பவத்தை தடுக்க முடியாது சூழ்நிலையே தற்போது வரை உள்ளது.


இந்த நிலையில், சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11-ஆம் வகுப்பு மாணவி கடந்த டிசம்பர் 18-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே என கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ள மாணவி, #SchoolisNotSafety என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்கொலை கடிதம் கண்டெடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.






தற்கொலை செய்து கொண்ட மாணவி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று காலை வழக்கம்போல் அவரது தந்தை வேலைக்கு சென்று விட்டார். அவரது தாய் மற்றும் மகள் மட்டும் வீட்டில் இருந்தனர். தாய் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது அறைக்குள் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. கதவை தட்டியும் திறக்காததால் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் - Helplines Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours) State suicide prevention helpline – 104 (24 hours), iCall Psychosocial helpline – 022-25521111


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண