மனைவியை கொலை செய்த பேராசிரியரின் மரண தண்டனை ஆயுளாகக் குறைப்பு!

போலீஸ் வந்தவுடன் தான் தந்தை தான் மனைவியைக் கொன்றுவிட்டார் என்றார். எனது மனைவியிடம் எனது தந்தை தவறாக நடக்க முற்பட்டார். அப்போது, என் மனைவி தடுத்ததால் கொலை நடந்துவிட்டது என்று கட்டுக்கதை கட்டினார்.

Continues below advertisement

மனைவியை கொலை செய்த பேராசிரியரின் மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது.

Continues below advertisement

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் கண்ணன். வயது 50. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அவரது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 

குற்றம் நடந்தது என்ன?

கண்ணன் ஒரு கல்லூரியில் நிர்வாக மேலாண்மை துறையில் பேராசிரியராக இருந்தார். அவருக்கு மனைவியும், 13 வயதில் ஒரு மகளும் (2012ல் 13 வயது) இருந்தனர். கண்ணன் அடிக்கடி அவரது மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 16 2012ல் சம்பவ தினத்தன்று ராஜகோபாலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது கண்ணன் ஆத்திரத்தில், மனைவியின் தலையில் குழவியைப் போட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், மனைவியின் கழுத்தையும் அறுத்துள்ளார். இது அனைத்தும் நடக்கும் போது அவர்களின் குழந்தை வேறு ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். மனைவியைக் கொலை செய்த பின்னர் கண்ணன் தனது தந்தை ராஜகோபாலுக்கு ஃபோன் செய்து தகவல் கூறியுள்ளார். பதறிப்போன ராஜகோபால் போலீஸுக்கும் தகவல் கொடுத்துவிட்டு அண்ணாநகரில் உள்ள வீட்டருகே இருப்பவர்களுக்கும் தகவல் கொடுத்துவிட்டு விரைந்துவந்தார்.

ஆனால், போலீஸார் வந்தவுடன் ராஜகோபால் தான் தனது மனைவியைக் கொன்றுவிட்டார் என்றார். எனது மனைவியிடம் எனது தந்தை தவறாக நடக்க முற்பட்டார். அப்போது, என் மனைவி தடுத்ததால் கொலை நடந்துவிட்டது என்று கட்டுக்கதை கட்டினார். ஆனால், சாட்சியங்கள் கண்ணன் மீதான குற்றச்சாட்டை தெளிவாக நிரூபித்தது. இதனால் கண்ணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


இந்நிலையில் கண்ணன் மரண தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கண்ணனின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்து உத்தரவிட்டனர். 

நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையின் போது கூறியதாவது:

கண்ணன் எப்போதுமே குற்றச் செயல் புரிபவராக இருந்ததில்லை. அவரால் சமூகத்துக்கு நிச்சயமாக இடையூறு இருக்காது. கண்ணன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அதற்காக வருந்துகிறார். அவர் திருந்தி வாழவே விரும்புகிறார். இதை அரிதினும் அரிதான குற்றமாகக் கருதமுடியாது. அவருக்கு மரண தண்டனை தேவையில்லை. அவர் திருந்த வாய்ப்பளித்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனால் கண்ணன் ஆயுள் தண்டனையுடன் விடுதலையாகும் சூழல் உருவாகிறது. 2012ல் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola