நடுத்தர மக்களின் ஒரே கனவு எப்படியாவது சொந்த வீடு கட்டி, ஒரு நாளாவது சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என்பதுதான், அதற்காக பல லட்சங்களை உறவினர்கள் மற்றும் வங்கி என எங்கெங்கு கிடைக்கிறதோ அங்கெல்லாம் கடன்பட்டு சொந்த வீட்டை கட்டி வருகிறார்கள். எப்படி ஒரு மனிதனுக்கு உணவு, உடை அவசியமோ அதேபோல சொந்த வீடு. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே, தாங்கள் கட்டிக் கொண்டு வரும் வீட்டை இடித்த போவதாக, வந்த அறிவிப்பை அறிந்து பெண் ஒருவர், அதே வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நரியம்பாக்கதை சேர்ந்தவர் மோகன் (35) , இவர் மனைவி சுபஸ்ரீ (30). 6 ஆண்டுகளுக்கு முன்பாக இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். திருமணம் ஆனதிலிருந்து இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். வாடகை வீட்டில் வசித்த அவர்கள் சொந்தமாக நிலம் வாங்க முற்பட்டு, படப்பை அருகே புறம்போக்கு நிலத்தை நான்கரை லட்சத்துக்கு வாங்கி, உறவினர்களிடம் கடன் பெற்று அந்த இடத்தில் அதில் வீடு கட்டி கொண்டு வந்தனர்.
இந்நிலையில் குன்றத்தூர் வட்டாரவளர்சி அலுவலகம் சார்பில் அப்பகுதில் 60 வீடுகள் நீர் வழி செல்லும் இடத்தில் கட்டியுள்ளதாக கூறி, 21 நாட்களுக்குள் ஆவணங்களை தாக்கல் செய்திட கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் அந்த குடும்பமே அதிர்ச்சியடைந்தனர், அதே வேலையில் சுபஸ்ரீ மட்டும் கணவருக்கு தனியாக உறுக்கமான கடிதம் எழுதியுள்ளார். அதில் "மாமா உங்களை ரொம்ப பிடிக்கும், நான் உங்களை வீடு வாங்க சொல்லி கடனாளியாக்கிவிட்டேன்" என எழுதிவைத்து விட்டு புதியதாக கட்டிவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் காவல்துறை பிரேதத்தை கைப்பற்றிய நிலையில் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் நிறைவு பெறாததால்,காஞ்சிபுரம் ஸ்ரீ பெரும்புதூர் கோட்டாட்சியர் சைரேந்திரன் விசாரணை செய்திட பரிந்துரை செய்தனர். அதனையடுத்து பிரேத பரிசோதனை செய்த நிலையில் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், பிரேதத்தை வாங்க மறுத்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் காவல் உதவி ஆணையாளர் ஸ்ரீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பிரேதத்தை உறவினர்கள் வாங்கி சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடத்தை கடன்பட்டு வாங்குவதற்கு முன்பு அந்த இடம் எந்தவித வில்லங்கமும் இல்லாமல் இருக்கிறதா , என்று பார்த்து வாங்குவது நன்மை.
Suicidal Trigger Warning
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).