திடீரென மாயமான சுரேஷ்


சென்னை கேகே நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவர் கேகே நகரில் பிரிண்டர் மற்றும் ஜெராக்ஸ் எந்திரங்களுக்கு மை விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ராதா(37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி வெளியே சென்ற சுரேஷ், பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ராதா அளித்த புகாரின் பேரில், கே.கே.நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சுரேஷை தேடிவந்தனர்.


ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல லட்சம் இருந்துவிட்டேன்


"அப்பொழுது மனைவி வீட்டில் இருந்த உடைமைகளை பரிசோதனை செய்த பொழுது சுரேஷ் எழுதி வைத்திருந்த ஒருகடிதத்தில், நான் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல லட்சம் இழந்துவிட்டேன். வாழத் தகுதியற்ற நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன், நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள், இந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள் நான் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன்" என்று எழுதியிருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில், அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.16 லட்சம் இழந்தது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று காலை மெரினா கடற்கரை அவ்வையார் சிலை பின்புறம் உள்ள கடலபரப்பில் ஆண்சடலம் கரை ஒதுங்கியது.



16 லட்சம் வரை ஆன்லைன் ரம்மியால் இழப்பு


மெரினா கடற்கரை காவல்துறையினர் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், அது மாயமான சுரேஷ் என்பதும், அவர்கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. ஆன்லைன் ரம்மி மூலம் ரூ.16 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாகவும் இதனால் அதிக அளவு கடன் பெற்றதாகவும் கூறப்படுகிறது. தாம்பரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருந்து விற்பனை செய்யும் பிரதிநிதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு தற்கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)