மாங்காடு : சென்னைமாங்காடு அடுத்த கொளப்பாக்கம், வன்னியர் தெருவை சேர்ந்தவர் தனஞ்செழியன் (37), பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அம்பிகா (28), இவர்களுக்கு திருமணமாகி சர்வேஷ் பிரணவன்(13), என்ற மகனும், யாழிசை(11), என்ற மகளும் உள்ளனர். இருவரும் கொளப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.




 உயிரிழந்து கிடந்த தாய் மற்றும் தந்தை


இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்துவிட்டு குழந்தைகள் இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்தால், அவரது உறவினரை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அம்பிகா கழுத்தில் பெல்டால் இறுக்கி கொலை செய்யப்பட்டும்,  தனஞ்செழியன் தூக்கு போட்டு தொங்கியபடி இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து குழந்தைகள் அக்கம் பக்கத்து நேரிடும் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாங்காடு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு இன்ஸ்பெக்டர் ராஜி தலைமையிலான போலீசார் இறந்து கிடந்த கணவன் zமனைவியின் உடல்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.


 மனைவி மீது சந்தேகம்


விசாரணையில் கடந்த சில தினங்களாக அம்பிகா வேறு யாருடனோ செல்போனில் பேசிகொண்டு இருப்பதாக, மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் தனஞ்செழியன் மனைவியை பெல்டால் அடித்து உதைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். அவர் இறந்த நிலையில் பயந்து போய் தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது, இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது பள்ளி படிக்கும் குழந்தைகள் இருவரும் தாய் தந்தையை இழந்து நிற்பது குறிப்பிடத்தக்கது




Suicidal Trigger Warning..



வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


 




 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண