சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் தங்க நகை கடை உள்ளது. இந்த நகைக் கடையில் பாஸ்கர் வயது 51 என்பவர் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். கடைக்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் கடையில் வேலை செய்யும் கௌசல்யா என்பவரிடம் தங்க காப்பு காண்பிக்க கூறியுள்ளனர். அப்போது அவர் ஒவ்வொரு மாடலாக எடுத்து காண்பித்துள்ளார். நிறைய மாடல்களை பார்த்த அப்பெண்கள் அதன் பின்பு எந்த மாடலும் பிடிக்கவில்லை என்று கிளம்பி சென்று விட்டனர்.

 

அதன் பிறகு இரவு நகைகளை சரிபார்த்த போது 20 கிராம் எடை கொண்ட தங்க காப்பு காணாமல் போயிருப்பதைக் கண்டு கௌசல்யா அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் தனது மேனேஜர் பாஸ்கரிடம் தெரிவித்தார். பாஸ்கர் கடையில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல வந்து தங்க காப்பை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து பாஸ்கர் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த திரு.வி.க நகர் போலீசார் சி.சி.டி.வி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து இரண்டு பெண்களையும் தேடி வருகின்றனர்.

 



 


ஆந்திராவில்  கஞ்சாவை கடத்தி  வட சென்னையில் விற்பனை  - 3 பெண் கஞ்சா வியாபாரிகள் கைது

 

சென்னை ஓட்டேரி பகுதியில் பெண்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக ஓட்டேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஓட்டேரி போலீசார் புரசைவாக்கம் பொன்னியம்மன் கோவல் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அந்த வீட்டில் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.

 



 

இதையடுத்து அந்த வீட்டிலிருந்த புரசைவாக்கம் பிரிக்லின் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆரவள்ளி (60) நாகவள்ளி (34) புளியந்தோப்பு குமாரசாமி ராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி (எ) அருப்பு கஸ்தூரி (50) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து சிறு சிறு பெட்டலங்களாக அதைப் பிரித்து ஓட்டேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விற்று வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.