சென்னை தாம்பரம் அடுத்த படப்பை முருகாத்தம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் வாழை இலை வியாபாரம் செய்து வருகின்றார். இவரது மகள் கீர்த்திகா (வயது17) நடந்து முடிந்த 12,ம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகிய நிலையில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் கீர்த்திகாவின் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கீர்த்திகா வீட்டில் படுக்கை அறைக்கு சென்று வெகு நேரமாக வெளியில் வராததால், சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவைத் தட்டி திறக்காதாலும்,, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலின் அடிப்படையில் உடலை மீட்டு உடல் கூறு ஆய்விற்க்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கீர்த்திகா அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்தால்தான் படிப்பில் கவனம் செலுத்தாமல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த போது பெற்றோர் திட்டியதால் மனம் உடைந்த கீர்த்திகா தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வந்தது.
Suicidal Trigger Warning.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்