சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்துள்ள  செங்கேணி அம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் ராம்குமார் வயது 35. கடந்த சில ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ராம்குமார். இவரது தாயார் மீனாட்சி , சகோதரி சந்தனமாரி  மற்றும் அவரது மகள் சண்முகப்பிரியா  அனைவரும் ஒரே குடியிருப்பில் வசித்து வந்தனர். சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ராம்குமார் பணியாற்றி வந்துள்ளார்.




இந்நிலையில் இன்று ராம்குமார் வீட்டில்  கூச்சல் சத்தம் கேட்டதால் வீட்டின் உரிமையாளர் ஓடிவந்து பார்த்தபோது, 4 பேர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்துள்ளனர். பின் தகவலறிந்து வந்த நீலாங்கரை போலீசார், 108 ஆம்புலன்ஸை வரவழைத்த மருத்துவர் அளித்த பரிசோதனையில் சந்தனமாரி, சண்முகப்பிரியா ஆகியோர் உயிரிழந்துவிட்டதாகவும்; ராம்குமார் மற்றும் மீனாட்சி ஆகியோருக்கு   இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து உடனடியாக ராம்குமார், தாயார் மீனாட்சி ஆகியோரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இருவரின் உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




இதுகுறித்து காவல்துறை  வட்டாரத்தில் விசாரித்த பொழுது, ராம்குமாருக்கு அதிகளவில் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், இன்று மதியம் தான் பணிபுரியும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இன்று வேலைக்கு வரவில்லை, என்றும் நாங்கள் அனைவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனை அடுத்து தான் இந்த தற்கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருந்தும் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை தீவிர படுத்தி உள்ளோம் என தெரிவித்தனர்.


Suicidal Trigger Warning.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)