சென்னை, பெரம்பூர் கோபால் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். அவருக்கு வயது 37. இவருடைய மனைவி ஜமுனா. அவருக்கு வயது 33. நந்தகுமார் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், 1 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். பெரம்பூரில் உள்ள தனது கணவர் வீட்டில் ஜமுனா மாமியாருடன் வசித்து வருகிறார்.


வீட்டில் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், ஜமுனா தன்னுடைய நகைகளை அவரது அம்மா வீட்டில் கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த ஜமுனாவின் மாமியார் ஜமுனாவிடம் கேட்டுள்ளார். அப்போது, மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஜமுனாவை அவரது மாமியார் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.




இதனால், ஜமுனா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஜமுனா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, வீட்டின் அறையில் தூக்கில் தொங்கியுள்ளார். அவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


அங்கு ஜமுனாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஜமுனா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து, ஜமுனாவின் தந்தை தினகரன் தன்னுடைய மகள் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், ஜமுனாவின் கணவர் மற்றும் ஜமுனாவின் மாமியாரை கைது செய்தால் மட்டுமே ஜமுனாவின் உடலைப் பெற்றுக்கொள்வோம் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




இதையடுத்து, ஜமுனாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், ஜமுனாவின் கணவர் நந்தகுமார் கைது செய்யப்பட்டார். அதன்பிறகே ஜமுனாவின் உடலை அவரது பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர். மாமியார் திட்டியதால் மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண