கதவை திறந்து வைத்து குடும்பத்துடன் தூக்கம்
சென்னை மாதவரம் பகுதியில் வசித்து வரும் 27 வயது பெண் , இரவில் வீட்டின் கதவை திறந்து வைத்து கொண்டு குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதிகாலையில் பெண் வீட்டின் அருகில் வசித்து வரும் கமேஷ் என்பவர் பெண் வீட்டினுள் நுழைந்து பாலியல் அத்து மீறிலில் ஈடுபட முயன்றுள்ளார்.
உடனே அந்தப் பெண் சத்தம் போடவே , கமேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் M-1 மாதவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
M-1 மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , வழக்கில் சம்பந்தப்பட்ட மாதவரம் பகுதியை சேர்ந்த கமேஷ், ( வயது 54 ) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட கமேஷ் மீது ஏற்கனவே 2 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி கமேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க மகன் செய்த செயல்
சென்னை அயனாவரம் பங்காரு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் எல்சி ( வயது 57 ) இவர் தனது கணவர் மற்றும் மகனுடன் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
கடந்த 06.05.2025 அன்று இரவு எல்சி வீட்டில் தனியாக இருந்த போது வீட்டு காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு எல்சி கதவை திறந்து போது , மாஸ்க் அணிந்திருந்த ஒரு நபர் எல்சி முகத்தில் ஏதோ ஒரு ஸ்பிரே அடித்துள்ளார். எல்சி தடுமாறி வீட்டிற்குள் நுழைந்த போது , அந்த நபர் வீட்டிற்குள் நுழைந்து அவரது கழுத்திலிருந்த சுமார் 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
இது குறித்து எல்சி K-2 அயனாவரம் காவல் நிலைய குற்றப் பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
K-2 அயனாவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்ததில், புகார் தாரரின் மகன் எபின் என்பவர் தனது தாய் எல்சியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது உறுதி செய்யப்பட்டது.
அதன் பேரில் எபின் ( வயது 25 ) என்பவரிடம் விசாரணை செய்து அவரிடமிருந்து புகார் தாரரின் 5 சவரன் தங்கச் சங்கிலி மீட்கப்பட்டு , உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் விசாரணையில் எபின் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்து , நஷ்டம் அடைந்ததால் , கடனை அடைக்க தாயாரின் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றது தெரிய வந்தது.