இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்பதில் என்.ஐ.ஏ. பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்.  அமைப்பினரின் நடவடிக்கைகளை தீவிரமாக என்.ஐ.ஏ. கண்காணிக்கும் பணியிலும், பயங்கரவாத தடுப்பு திட்டத்தை தடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கைது:


ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் திருச்சூர் தள தலைவராக இருப்பவர் அமீர்  என்ற சையத் நபீல் அகமது. இவருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்தது முதல் இவரது நடவடிக்கைகளை என்.ஐ.ஏ. கண்காணித்து வந்தது.


இந்தாண்டு ஜூன் மாதம் சத்தியமங்கலம் அருகே அஷ்ரப் என்பவரை என்.ஐ.ஏ. கண்காணித்து கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் சையல் நபீல் அகமது பற்றி பல்வேறு தகவல்கள் கிடைத்தது. மேலும், அவர் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.


ஆவணங்கள் பறிமுதல்:


இந்த நிலையில், வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற சையத் நபீல் அகமதுவை போலீசார் இன்று சென்னையில் வைத்து கைது செய்தனர். இவர் தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தலைமறைவாக இருந்து வந்தவர். இந்த சூழலில், அவரை இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சையத் நபீல் அகமதுவிடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக பல்வேறு நபர்கள் விசாரணை கண்காணிப்பில் இருக்கும் சூழலில், தற்போது நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்களது சோதனையையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Crime: ’என்னை விட்டுடுங்க': கெஞ்சிய பெண்; தரதரவென இழுத்து.. சுற்றி வளைத்து கொடூரமாக தாக்கிய கும்பல்..ஷாக் வீடியோ!


மேலும் படிக்க: திமுக முன்னாள் மண்டலத்தலைவர் பெங்களூரில் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்ல முயற்சி - அதிர்ச்சி சிசிடிவி காட்சி