சென்னை புளியந்தோப்பு அருகே அமைந்துள்ளது கொடுங்கையூர். இந்த பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய மாமா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது, அவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. சிறுவனுடன் சேர்ந்து சிறுமி அடிக்கடி வெளியில் சென்று சுற்றி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில், கடந்த 7-ந் தேதியன்று புளியந்தோப்பில் உள்ள எல்லையம்மன் ஆலயத்திற்கு சிறுமியை சிறுவன் அழைத்து வந்துள்ளான். அப்போது, தான் தயாராக வைத்திருந்த தாலியை சிறுவன் சிறுமியின் கழுத்தில் கட்டியுள்ளான். மேலும், தாலி கட்டியது மட்டுமின்றி சிறுமியின் நெற்றியில் குங்குமம் வைத்து அழைத்துச் சென்றுள்ளான். இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த சிறுவனின் நண்பர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.


பின்னர், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து நண்பனுக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவை கண்ட பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த சிலர் சென்னையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் உதவி மையத்திற்கு புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.


குழந்தைகள் நல அமைப்பினர் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த 17 வயது சிறுவனுடன் இந்த 15 வயது சிறுமி பலமுறை பாலியல் ரீதியில் உறவில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். இதைக்கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், இந்த விவகாரம் குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியின் கழுத்தில் தாலி கட்டிய சிறுவனை தேடியபோது அவன் தலைமறைவாகியது தெரியவந்துள்ளது.




இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் குடும்பத்தாரிடமும், சிறுவனின் குடும்பத்தாரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாகியுள்ள சிறுவனை தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாகவே பள்ளிச்சிறுவர், சிறுமியர்கள் சிலர் காதல் என்ற பெயரில் எல்லை மீறுவதும், பள்ளி பருவத்திலே திருமணம் செய்து கொள்வதும் அதிகரித்து வருவது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க : கொடுங்கையூர் விசாரணைக் கைதி இறப்புக்கும் காவல் துறைக்கும் சம்பந்தமில்லை – கூடுதல் ஆணையர் அன்பு பேட்டி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண