தாம்பரம் (Tambram News): சென்னை பள்ளிக்கரணை அடுத்துள்ள அம்பாள் நகர் பகுதியில், வசித்து வருபவர் தங்க புஷ்பம் (75). தங்க புஷ்பத்தின் கணவர் சுப்பையா, தற்பொழுது அவர் உயிருடன் இல்லை. இவருக்கு ஜெயப்பெருமாள் மற்றும் புஷ்பநாதன் ஆகிய இரண்டு மகன்கள் மற்றும் மோகன பிரியா என்ற ஒரு மகளும் உள்ளனர். தங்க புஷ்பத்தின் கணவர் சுப்பையா இருந்த பொழுது, சென்னை குரோம்பேட்டை அடுத்துள்ள அஸ்தினாபுரம் பகுதியில் 8000 சதுர அடி அளவு நிலத்தை மகன்கள் புஷ்பநாதன், ஜெயபெருமாள் ஆகியோருக்கு செட்டில்மெண்ட் பத்திர மூலம் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு தாம்பரம் சானிடோரியம் பகுதியில் சுமார் 2700 சதுர அடி கொண்ட மனையில், 800 சதுர அடி வீடு மற்றும் நான்கு கடைகள் அடங்கிய தங்களுக்கு, சொந்தமான சொத்தை தங்களது மகள் மோகனப்பிரியாவுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர். அந்த பத்திரப்பதிவு செய்த பொழுது மகன் ஜெயபெருமாள் சாட்சி கையெழுத்து போட்டு உள்ளார். தங்க புஷ்பத்தின் கணவர் சுப்பையா இறந்த பின்னர், ஜெயபெருமாள் தங்க புஷ்பத்தை சரியாக பார்த்துக் கொள்ளாததால், தங்க புஷ்பம் அவரது மகள் மோகனப்பிரியாவுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் மோகனப்பிரியா வெளிநாடு சென்று உள்ளார் , மோகனப்பிரியாவின் கணவரின் தம்பி கார்த்திகேயன் பெயரிலும், தனது சொத்துக்கு பவர் பத்திரம் மூலம் பதிவு செய்து கொடுத்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளார். தற்பொழுது மோகனப்பிரியா அங்க இல்லாததால், அவரது அண்ணா ஜெய பெருமாள் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து சுமார் 5 கோடி மதிப்பிலான குரோம்பேட்டில் உள்ள மோகன பிரியாவிற்கு சொந்தமான சொத்தை அவரது மனைவி விஜய் தாரணிக்கு செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
அதே நாளில் , விஜயராணி வேறு ஒருவருக்கு மோகனப்பிரியாவின் சொத்தை பவர் பத்திரம் மூலம் பதிவு செய்து கொடுத்துள்ளார். மோகனப்பிரியாவின் சொத்து தங்க புஷ்பம் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் பெயரில் பவர் பத்திரம் மூலம் பதிவு செய்யப்பட்டு இருக்கும்போது, சொத்தை விற்பனை செய்ய ஜெயப்பெருமாள் அவரது மனைவி விஜயதாரணி ஆகியோர் எப்படி முயற்சித்திருக்க முடியும். எனவே போலி ஆவணங்கள் தயார் செய்து சொத்து விற்பனை செய்து முயற்சித்த ஜெயபெருமாள் அவரது மனைவி விவேகாரணி மற்றும் அதற்கு சாட்சியாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தங்களது சொத்தை மீட்டு தர வேண்டும் என தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், உள்ள மத்திய குற்றப்பிரிவு புகார் அளித்தார்.
இது குறித்து விசாரணை நடத்தி ரூ.5 கோடி மதிப்பிலான சொத்தை விற்க முயன்ற ஜெயபெருமாளை கைது செய்து நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெயப் பெருமாளின் மனைவி விஜயதாரணி மற்றும் வாசகர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர் . வெளிநாட்டிலிருந்து இருக்கும் தங்கையின் சொத்தை அண்ணன் விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.