சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் மவுண்ட் ரோடு -பூந்தமல்லி சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. அதில் வாடிக்கையாக வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தும், பணத்தினை டெபாசிட் செய்தும் வந்தனர்.இங்குள்ள பணம் செலுத்தும் எந்திரத்தில் மொத்தம் 28 எண்ணிக்கையில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாக வங்கி மேலாளர் லதா சந்தேகம் அடைந்துள்ளார். அதை பரிசோதித்து பார்த்து இதுகுறித்து நந்தம் பாக்கம் காவல்துறையினர் புகார் செய்தார்.


வழக்குபதிவு செய்த நந்தம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தயதில், கள்ளநோட்டுகளை டெபாசிட் செய்தது பரங்கிமலையை 28 வயதான சேர்ந்த எப்ஸி என தெரிய வந்தது. தனியார் கிரெடிட் கார்டு தொடர்பான நிறுவனத்தில் பணியாற்றும் எப்ஸியிடம் காவல்துறையினர் விசாரித்தனர்.


ரூ.14 ஆயிரம்


அப்போது எப்ஸி, "வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணத்தை செலுத்த சென்ற போது, அங்கிருந்த மர்மநபர் ஒருவர், என்னிடம் ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, அதனை எனது வங்கி கணக்கில்டெபாசிட் செய்துவிட்டு, ஆன்-லைனில் அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கும்படி கூறினார். அதன்படி நானும், அந்த பணத்தை எனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்தேன். ஆனால் நான் செலுத்திய பணம் எனது வங்கிகணக்கில் வந்து சேராததால் அவருக்கு அனுப்பி வைக்க வில்லை. அவர் யார்? எங்கு இருக்கிறார் என்றும் எனக்கு தெரியாது” என கூறினார்.


இதையடுத்து எப்ஸியிடம் கள்ள நோட்டுகளை கொடுத்து டெபாசிட் செய்ய சொன்ன மர்ம நபர் யார்? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண