சென்னை, ஆவடியில் அமைந்தள்ள ஓ.சி.எப். மைதானத்தில் நண்பர்களாகிய சுந்தர் மற்றும் அசாரூதின் மிகவும் கொடூரமான நிலையில் முகம் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


போலீசார் விசாரணையில் ஆவடியைச் சேர்ந்த மணிகண்டன் ( 32 வயது) என்பவர் கூலிப்படையினரை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், மணிகண்டனுக்கு பிரிசில்லா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு கஞ்சா விற்பனை வழக்கில் மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது, பிரிசில்லாவிற்கும், ஆவடி பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த ஜெகனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.




2019ம் ஆண்டு பிரிசில்லா மணிகண்டனை விட்டு பிரிந்து ஜெகனுடன் தனியாக வாழ ஆரம்பித்துவிட்டார். மணிகண்டனும் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த நிலையில், பிரிசில்லாவிற்கு சமீபகாலமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஜெகன் பணமின்றி தடுமாறியுள்ளார். இதனால், கடந்த 4-ந் தேதி ஜெகன் பிரிசில்லாவின் முன்னாள் கணவர் ஜெகனை ஆட்டோவில் கடத்தியுள்ளார். அப்போது, ஜெகனின் நண்பர்களான யாசின் மற்றும் சுந்தர் உடனிருந்துள்ளனர்.


அப்போது, மணிகண்டனிடம் பிரிசில்லாவின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 1 லட்சம் பணகம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும், ஆந்திராவிற்கு சென்று 2 கிலோ கஞ்சா வாங்கி வரும்படியும் மிரட்டியுள்ளனர். மணிகண்டன் இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்பதற்காக மணிகண்டனை நிர்வாணப்படுத்தி ஜெகன் வீடியோ எடுத்துள்ளார். பணமும், கஞ்சாவும் குறிப்பிட்ட நேரத்தில் தராவிட்டால் இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று ஜெகன் மிரட்டியுள்ளார். மணிகண்டனும் 10 நாட்களில் பணத்தை தருவதாக கூறியுள்ளார்.




தனது மனைவியை தன்னிடம் இருந்து பறித்தது மட்டுமின்றி, பணம், கஞ்சா கேட்டு தன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய ஜெகனை தீர்த்துக்கட்ட மணிகண்டன் முடிவுசெய்துள்ளார். ஜெகனை கொல்வதற்கு தனது நண்பர்கள் மற்றும் கூலிப்படையினரையும் ஏற்பாடு செய்துள்ளனர். சம்பவத்தன்று பணம் மற்றும் கஞ்சா ஏற்பாடு செய்துவிட்டதாக கூறி  ஜெகனிடம் கூறியுள்ளார். ஜெகனும் ஓ.சி.எப். மைதானத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.


மணிகண்டனிடம் பணம் பெறுவதற்காக ஜெகன் தனது நண்பர்கள் சுந்தர் மற்றும் அசாரூதினுடன் சென்றுள்ளார். அப்போது, யாசின் உடன் வரவில்லை. ஜெகன் அந்த இடத்திற்கு வந்ததும் மணிகண்டன் ஏற்பாடு செய்திருந்த கூலிப்படையினர் ஜெகனை கொலை செய்ய முயற்சித்தனர். சுந்தரும், அசாருதீனும் ஜெகனை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.




ஆனால், ஜெகன் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். ஆத்திரமடைந்த கூலிப்படையினர் சுந்தரையும், அசாரூதினையும் சரமாரியாக வெட்டி கொன்றுள்ளனர். இதையடுத்து, தனிப்படை போலீசார் மணிகண்டன், (32) அவரது நண்பர்களான கோவில்பதாகை, திருமுல்லைவாயலைச் சேர்ந்த பிரகாஷ் (25), மிட்டினமல்ல, ராஜா தெருவைச் சார்ந்த விஜய் (26) முத்தாபுதுப்பேட்டையைச் சேர்ந்த பாரதி (எ) பார்த்திபன் 22, கொள்ளுமேட்டைச் சேர்ந்த சதீஷ்(21) கூலிப்படையினரான எண்ணூரைச் சேர்ந்த வினோத் (19) அஜீத்குமார் (20) வியாசர்பாடி, சத்யா நகரைச் சேர்ந்த தனுஷ் (20) கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கப்பார் (21) ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண