அந்தோதியா விரைவு ரயில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே செல்லும் பொழுது, இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலையைவைத்து படுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி சென்ற அந்தோதியா விரைவு ரயில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே செல்லும் பொழுது, இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் வழக்கு பதிவு செய்து உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறுவாழ்வு மையத்தின் சிகிச்சை
தாம்பரம் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர், கூடுவாஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி என்பவரது மகன் பரணி வயது 19 என தெரிய வந்தது. பத்தாம் வகுப்பு வரை படித்த பரணி கஞ்சா போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையானதாகவும் , எதற்காக போதை மறுவாழ்வு மையத்தின் சிகிச்சை பெற்று சமீபத்தில் அங்கிருந்து வந்ததாகவும், பரணியின் தவறான பழக்கத்தால் அவர் காதலித்த பெண் அவரிடம் பேச மறுத்ததால் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இளைஞர் ஒருவர் காதலி பேச மறுக்க சம்பவத்தால் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்