சென்னையை அடுத்து அமைந்துள்ளது அயப்பாக்கம். இங்குள்ள மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலக வளாகத்தில் விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்டார். இவர் பெயர் ராயப்பன் ஷாஜி ஆண்டனி என்பதும், இவர் தெலுங்கானாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 


தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ராயப்பன் ஷாஜி ஆண்டனி 48 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று சென்னையை அடுத்த சோழவரம் அருகே மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இந்தநிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.  இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.