திருமணத்திற்கு பிறகு கணவன் -மனைவி இடையே சண்டை வருவது வழக்கம். எனினும் ஒரு சில நேரங்களில் இந்தச் சண்டை உயிரை பறிக்கும் வகையில் மாறுவது வருத்தத்திற்குரிய ஒன்று. அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனைவி உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.கலைவேந்தன்(30). இவர் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ப்ரியதர்ஷினி(27) என்ற பெண்ணிற்கும் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. 


இந்தச் சூழலில் கடந்த ஒராண்டாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அடிக்கடி அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்தாண்டு மே மாதம் இவர்கள் இருவரையும் சமாதானம் செய்துவிட்டு மீண்டும் பெற்றோர்கள் சேர்ந்து வாழ வைத்துள்ளனர். 




இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இந்த தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்தப் பிரச்னையில் இவர்கள் இவருக்கும் இடையே சண்டை அதிகமாகியுள்ளது. இவர்களுடைய குழந்தை ப்ரியதர்ஷினியின் வீட்டில் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவி ஆகிய இருவர் மட்டும் தனியாக இருந்துள்ளனர். அடுத்த நாள் காலையில் ப்ரியதர்ஷினி அறை கதவை திறக்கப்படவில்லை என்பதால் கணவர் கலைவேந்தன் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். அதன்பின்னர் பெற்றோருடன் கதவை திறந்து பார்த்த போது ப்ரியதர்ஷினி தூக்கில் நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


இதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ப்ரியதர்ஷினியின் குடும்பத்தினர் கணவர் கலைவேந்தன் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் திருமணமாகி 5 வருடங்களுக்குள் மனைவி உயிரிழந்துள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண