செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இள்ளலூர் பகுதியில் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த தாண்டவமூர்த்தி. இவரது சகோதர் குமார். இருவரும் சேர்ந்து அப்பகுதியில் தனியாக மனைப்பிரிவு பிரித்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டுமான பணிகளுக்காக கொண்டுவந்த சுமார் 3 டன் இரும்பு கம்பி காணாமல் போனதாக திருப்போரூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.



 

இதுகுறித்து திருப்போரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த கார் ஒன்றை சோதனை செய்தபோது, அதில் இரண்டு துப்பாக்கி மற்றும் அயல்நாட்டு மது பானங்கள் இருப்பதை திருப்போரூர்  காவல் ஆய்வாளர் பறிமுதல் செய்து காரில் வந்த 2 பேரை கைது செய்து காவல் திருப்போரூர்  நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் கார், மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக சந்தேக வலையில் சிக்கிய சிலரிடமும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.



 

இதனால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டது, இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் திருப்போரூர் காவல் நிலையம் நேரடியாக சென்று துப்பாக்கி மற்றும் மதுபானங்கள் கொண்டு வந்த நபர்களிடம் தொடர் விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் சொல்வதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதில் யாருடைய தொடர்பில் உள்ளார்கள் எதற்காக இங்கு வந்தார்கள், துப்பாக்கி கைமாற்றுவதற்காகவா அல்லது காட்டில் மிருகங்களை வேட்டையாட கொண்டுவந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிகளுக்கு லைசன்ஸ் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நபர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்து வருவதால் விசாரணையில் சுணக்கம் மேற்பட்டு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.