சென்னை புறநகர் பகுதி


சென்னை புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஒன்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இப்பகுதியில் இருக்கும் அதிக அளவு  பணப்புழக்கம் இருப்பதால்,  சிறு சிறு தொழிற்சாலைகளை மிரட்டி அதன் மூலம் பணம் பறிக்க  ரவுடிகள் உருவாகி வருகின்றன. அவ்வப்பொழுது ரவுடிகளை ஒடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தாலும்,  இது தொடர் கதை ஆகி வருகிறது.  சில சமயங்களில்  ஒரு பகுதியில் உருவாகும் ரவுடிகள் காவல்துறையினர் நெருக்கடி காரணமாக,  பிற மாவட்டங்களால் அது வேறு மாநிலங்களுக்கு தப்பி செல்வதும் நடக்கின்றது.  அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு கொலை செய்துவிட்டு  தப்பி ஓடிய ஒரு குற்றவாளி  மும்பை சென்று அங்கேயும் குட்டி தாதாவாக மாறி குற்றங்களை செய்திருக்கிறார்.  சம்பந்தப்பட்ட நபரை செங்கல்பட்டு மாவட்ட போலீசார் கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.


தலைமறைவு  கொலை  குற்றவாளி மும்பையில் கைது

செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம்  டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார்  என்பவர் பெட்டி கடை நடத்தி வந்தார். கடந்த 2016ம்  ஆண்டு அவரது கடைக்கு  பொருள்கள் வாங்க வந்த கும்பல் ராஜ்குமாரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பித்தது. இச்சம்பவம் தொடர்பாக  செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில், கலைவாணன், வந்தவாசி பகுதியை சேர்ந்த சரவணன் என்ற பாம் சரவணன், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த கபில்தேவ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சரவணனை  தவிர மற்ற அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.


நாசிக் சிறை


கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சரவணனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மும்பைக்கு தப்பி ஓடிய சரவணன் அங்கு குட்டி தாதாவாக மாறி குண்டர் சட்டத்தில் நாசிக் சிறையில் அடைக்கப்பட்டார். நாசிக் சிறையில் சரவணன் இருப்பதை கண்டு பிடித்த செங்கல்பட்டு  தாலுகா  போலீசார் மாவட்ட எஸ்.பி., சாய்பிணீத் உத்தரவின் உதவி ஆய்வாளர் ரஞ்சித் தலைமையில் தனிப்படை போலீசார் நாசிக் சிறையில் இருந்து விடுதலையான சரவணனை கைது செய்து செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் அழைத்து வந்தனர். தீவிர விசாரணைக்கு பின் சரவணன் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.