இந்திய கிரிக்கெட் அணி:


இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு வருகிறது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி20 போட்டிகள் சமநிலை பெற்றது.


ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியிடம் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


இதனிடையே, இரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று  ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி, தென்னப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன்  நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்றது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த அந்த அணி 23.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்களில் சுருண்டது. 


மிரட்டிய சிராஜ்:


முன்னதாக, இந்த போட்டியில் தென்னப்பிரிக்க வீரர் Kyle Verreynne அதிகபட்சமாக 15 ரன்கள் எடுத்தார். அந்த அணியைச் சேர்ந்த 7 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். மேலும், இரண்டு வீரர்கள் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. 


அசத்தலாக பந்து வீசிய இந்திய அணியின் வேகப்ந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்படி 9 ஓவர்கள் வீசிய அவர் 3 ஓவர்களை மெய்டன் செய்து 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


 


 






 


கோலி செய்த செயல்:



முன்னதாக இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகராஜ் பேட்டிங் செய்யும் போது  'ராம் சியா ராம்' பாடல் ஒலித்தது. அப்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஸ்ரீ ராமரைப் போல கைகளை கூப்பி வில் சரத்தை இழுத்துக்காட்டினார். இதனைக்கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 


மேலும் படிக்க: T 20 உலகக்கோப்பை.. விராட் கோலி.. ரோஹித் சர்மா விளையாடுவார்களா? அஜித் அகர்கர் ஆலோசனை! வெளியான முக்கிய தகவல்!


 


மேலும் படிக்க: Mohammed Siraj: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்... அனலாய் பறந்த முகமது சிராஜ்! அசத்தல் ரெக்கார்டு!