காஞ்சிபுரம் மாவட்டம் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஹரி பாபு இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு  காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சுஜிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்ட ஹரிபாபு , அவரது இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.




இந்நிலையில், செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் வந்த ஹரிபாபு செங்கல்பட்டு- தாம்பரம் செல்லக்கூடிய ரயில் முன் பாய்ந்துள்ளார். இதனை கண்ட சக பயணிகள் செங்கல்பட்டு இரும்பு பாதை காவலர்களுக்கு தகவல் தெரிவிக்க, ரத்த வெள்ளத்தில் இருந்த ஹரிபாபு வை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




இந்நிலையில் ஹரிபாபு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றி பார்த்தபோது அதில் குறிப்பிட்டிருந்தாவது  ;


”சுஜி நான் எந்த தப்பும் பண்ணல உனக்கு இதுவரைக்கும் துரோகமும் பண்ணல( ஐ லவ் யூ). சாதனா/ தன்விகா சாரி டா செல்லம் உங்கள விட்டு அப்பா ரொம்ப தூரம் போர. என் சாவுக்கு காரணம் என் பொண்டாடியோட அம்மா தான் என் பொண்டாடி என் குழந்தைகளை அவங்க கூப்பிட்டு போய்ட்டாங்க. என்னுடைய கடைசி ஆசை என்னுடைய சொத்து என் மகள்களுக்கு செல்ல வேண்டும். போலீசார் எனக்கு உதவி பன்னுங்க, இந்த உலகில் வாழ எனக்கு கொடுத்து வைக்கவில்லை” என உருக்கமான கடிதத்தை எழுதிவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் . நான்கு பக்கங்கள் கொண்ட தற்கொலை கடிதத்தை காவல்துறையினர் கைது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




தற்பொது உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காதல் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)