செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மனைவியை கொலை செய்து முயற்சித்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

 

செங்கல்பட்டு  : செங்கல்பட்டு மாவட்டம் பழையனூர் சாலை துலுக்கானத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் பூபாலன். (30) .  இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு மகருண்ணிஷா ( 22) என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருவதால் மகருண்ணிஷா செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் பூபாலன் மீது புகார் அளித்துள்ளார். 

 

இதுகுறித்த  விசாரணைக்காக மகருண்ணிஷா மற்றும் அவரது கணவரும் மகளிர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். விசாரணை நடந்து வந்தநிலையில் மகருண்ணிஷா வெளியில் வந்தபோது பூபாலன் தன் மனைவியை கொலை செய்யும் நோக்கில் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்த முயற்சித்துள்ளார். மிக சாதுர்யமாக மகருண்ணிஷா கத்தியை கையில் பிடித்துள்ளார். உடனடியாக பெண் காவலர்கள் பூபாலனை மடக்கி பிடித்து மகருண்ணிஷாவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி செய்து சிகிச்சைக்கு பிறகு மீண்டும் தன் கணவர் மீது செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பூபாலன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். விசாரணைக்கு வந்த காவல் நிலையத்திலேயே மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கொலை முயற்சி சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இஸ்லாமிய பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தை இருந்த நிலையில் அடிக்கடி இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அடிக்கடி காவல் நிலையத்தில் தன்னை குறித்து புகார் அளித்து தன்னுடைய கௌரவத்திற்கு மனைவி களங்கம் விளைவிப்பதாக கருதி மனைவி மீது ஆத்திரத்தில் இருந்து உள்ளார். இதன் காரணமாகவே, இந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக தெரிவித்தனர். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம் எனவும் தெரிவித்தனர்

 



Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண