செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் குடிபோதையில் வீட்டை கொளுத்திய நபரால்  எரிந்த வீடு

 

 வீட்டில் யாரும் இல்லாததால் மது அருந்திய நபர்

 

செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரதி செல்லம்மா நகர் பகுதியில் சேர்ந்தவர் தக்ஷிணாமூர்த்தி(50), லட்சுமி(47) தம்பதியினர் இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில் லட்சுமி ஆயுத பூஜை பண்டிகையை கொண்டாட தனது மகள் வீட்டிற்கு சென்னை சென்றுள்ளனர். இதனால் தனியாக இருந்த தட்சிணாமூர்த்தி வீட்டில் யாரும் இல்லாததால் மது அருந்தியுள்ளார்.

 


செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் குடிபோதையில் வீட்டை கொளுத்திய நபரால் எரிந்த வீடு


 

கொழுந்துவிட்டு எரிந்த படுக்கை அறை

 

போதை தலைக்கு ஏறிய நிலையில் தனது வீட்டின் படுக்கை அறையில் இருந்த படுக்கை மற்றும் பீரோக்களில் இருந்த துணிகளை தீயிட்டு கொளுத்தி உள்ளார்.  மேலும் தனக்குத் தானே தீயும் வைத்துக் கொண்டுள்ளார். அந்த தீயானது அவரது படுக்கை அறை முழுமையாக கொழுந்து விட்டு, எரியும் போது அக்கம் பக்கத்தினர் போதையில் இருந்த தட்சிணாமூர்த்தி வீட்டில் இருந்து வெளியேற்றினர். இதனை எடுத்து தகவல் அறிந்து வந்த மகேந்திரா சிட்டி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

 


செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் குடிபோதையில் வீட்டை கொளுத்திய நபரால் எரிந்த வீடு


 

 

போதையால் அவ்வப்போது 

 

சில தினங்களுக்கு முன்பு இதேபோல் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், குடிபோதையில் வீட்டிலிருந்த காரில் தீயிட்டு கொளுத்தியது குறிப்பிடத்தக்கது. போதையால் அவ்வப்போது இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனால் பொருளாதார மற்றும் உயிரிழப்புகள் பரவும் நடைபெற்று வருவதாக, சமூக ஆர்வலர்கள் பலர் வேதனை தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 



Suicidal Trigger Warning


 


 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


 


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)