சைபர் குற்றவாளிகளால் வங்கி கணக்கில் இருந்து  மோசடி செய்து எடுக்கப்பட்ட 1,52,200 ரூபாய் பணத்தை, துரித நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டு மீண்டும் புகார்தாரரின் வங்கி கணக்கில் வரவு வைத்த செங்கல்பட்டு இணையவெளி குற்ற தடுப்பு பிரிவு காவல்துறையினர்.






செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவர் தனது ஏடிஎம் கார்டு தன்னிடம் இருக்கும் போது சைபர் குற்றவாளிகள் தனது டிபிட் கார்டை பயன்படுத்தி ஏடிஎம் மூலமாகவும் ஆன்லைன்  மூலமாகவும் பல தவணைகளில் ரூபாய் 1,52,000 எடுக்கப்பட்டதாக செங்கல்பட்டு மாவட்ட  இணையவெளி குற்றத்தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அதிரடியில் இறங்கிய சைபர் காவல் துறை

 

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின் பேரில் இணையவெளி குற்றத் தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம்  மேற்பார்வையில் காவல் ஆர்.சிவகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் தனசேகரன் ஆகியோர் அடங்கிய இணையவெளி குற்றத்தடுப்பு காவல்துறையினாரால் விசாரணை மேற்கொண்டு மோசடியாக எடுக்கப்பட்ட ரூபாய் 1,52,200 பணம் மீண்டும் புகார்தாரரின் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டது.

 



 

பொதுமக்களே உஷார்..

 

பொதுமக்கள் சைபர் குற்றவாளிகளிடம் சிக்காமல் இருக்க விழிப்புடன் இருப்பதோடு,  எந்த ஒரு நபருக்கும் பணம் அனுப்பும் முன் அவரது உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும், அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் SMS  மற்றும் Websites-களில் வரும் Link-களில் சென்று Mobile No, Account No, OTP, Debit Card, Cvv போன்ற எந்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டாம் எனவும், உடனடி புகார்கள் மற்றும் நிதி இழப்புக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டும், இணைய புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சுகுணா சிங் பொது மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.