செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே தனது காதலியுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறி மதுபோதையில் மாமனை இரும்பு கம்பியால் குத்தி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருமணம் செய்து கொள்ள முடிவு
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை ஆதிவாசி நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (32). இவரது மனைவி செல்வி (29). இவரது மைத்துனர் கார்த்திக் (25). மற்றும் அவர்களது உறவினரான கவிதா (19) இருவரும் செய்யூர் அடுத்த வெடால் கிராமத்தை சேர்ந்த நடேசன் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலையில் கடந்த 20 நாட்களாக தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். கார்த்திக் மற்றும் கவிதா ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கார்த்திக் மற்றும் கவிதா ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்துள்ளனர்.
தகாத உறவில் இருந்த மாமன்
மேலும் அடுத்த சில மாதங்களில் கார்த்திக் மற்றும் கவிதா ஆகியோருக்கு திருமணம் செய்ய குடும்ப பெரியோர்களும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நாள் வரை கார்த்திக் மற்றும் கவிதா ஆகிய இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். இந்தநிலையில் கவிதா மற்றும் தங்கராஜ் ஆகிய இருவரும், தகாத உறவில் இருந்து வந்துள்ளனர்.. இது கார்த்திக்கு தெரியவர தங்கராஜிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். குடும்பத்தினரும் தங்கராஜ் மற்றும் கவிதா ஆகிய இருவரையும் கண்டித்து வந்துள்ளனர். இதன் காரணமாக அவப்பொழுது கார்த்திக் மற்றும் தங்கராஜ் இடையே சண்டை நடைபெறுவது வழக்கமாகவும் இருந்து வந்துள்ளது.
அடிக்கடி தகராறு
இந்நிலையில் அரிசி ஆலையில் பணி முடித்துவிட்டு கார்த்திக் மது அருந்தியுள்ளார். அதன்பின் மதுபோதையில் தங்கராஜிடம் கார்த்திக் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்குமிடையே வாக்கு வாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கார்த்திக் அருகிலிருந்த இரும்பு கம்பியை கொண்டு தங்கராஜின் வயிற்றில் குத்தியுள்ளார்.
மது போதையில் பழிதீர்த்த காதலன்
இதில் தங்கராஜ் பலத்தகாயம் அடைய அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு செய்யூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை செய்து செய்து செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மைத்துனரின் காதலியுடன் தகாத உறவில் இருந்த மாமன் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.