சீர்காழி சத்யா


 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த சத்யா என் சீர்காழி  (வயது 45) கொலை குற்றவாளி. கடந்த 2005-இல் ரவுடி டெலிபோன் ரவி வெட்டி கொலை செய்த வழக்கில்,  முக்கிய குற்றவாளி. மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 கொலை வழக்குகள், தமிழ்நாடு முழுவதும்  6 கொலை வழக்குகள், என மொத்தம் 11 கொலை வழக்குகள் மற்றும் 4 கொலை முயற்சி உள்பட 32 வழக்குகளில் ஈடுபட்டுள்ள  முக்கிய குற்றவாளி  சீர்காழி சத்யா , என்பதும் கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகும் பொழுது, திரைப்படங்களில் வருவது போல் 10-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் புடை சூழ நீதிமன்றத்தில் ஆஜராகி வருவதும் தொடர்கதையாக இருந்துள்ளது. 


 


மேலும், 2010-இல் அமைச்சர் கே.எம் நேரு சகோதரர் திருச்சி ராம ஜெயம் கொலை வழக்கில், உண்மை கண்டறியும் சோதனையில் முக்கிய குற்றவாளியாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதன் வழக்கு நிலுவையில் உள்ளது. தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு வந்தார் சீர்காழி சத்தியா கடந்த 2021-இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 


பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


 


இந்நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமல்லபுரம் அருகே இலந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர்  அலெக்ஸ்ஸிஸ்  சுதாகர்,  பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதியில் பிரபல ரவுடியாக வளம் வந்த  ரவுடிகள் கலந்து கொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


 


துப்பாக்கியை காட்டி


 



இந்த விருந்தில் குற்றவாளி சத்யா வந்திருப்பதாக, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாமல்லபுரம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, கார் முழுவதும் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் கார் அங்கு வந்திருந்தது. போலீசார் தணிக்கையில் ஈடுபட்டபோது  துப்பாக்கியை காட்டி மிரட்டி, அங்கு கார் நிறுக்காமல், அதிவேகத்தில் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தனி படை போலீஸ் மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரும் அந்த காரை பின்தொடர்ந்து சென்றனர். 


சத்யாவை நோக்கி சுட்டதில்


மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டு பழவேலி வழியாக சென்னை நோக்கி செல்லும் பொழுது, போலீசார் தன்னை பின் தொடர்ந்து வருவதை சத்யா கண்டுபிடித்துள்ளார். இதனை அடுத்து பழவேலி மலைப்பகுதி நோக்கி சத்யா தனது கூட்டாளிகளுடன் ஓடி உள்ளார். தப்பி ஓடும் ரவுடியை பிடிப்பதற்காக போலீசார் முயற்சி செய்த பொழுது , உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமாரை சத்யா தாக்கியுள்ளார்.


போலீசார் எச்சரிக்கை மீறியும் சத்யா தாக்குதலில் ஈடுபட்டதால், போலீசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது போலீசார் சத்யாவை நோக்கி சுட்டதில் இடது காலில் சத்யாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதன் அடுத்து சத்யாவை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 


குண்டர் சட்டம்


இந்த வழக்கில் கள்ளத்துப்பாக்கி சத்யாவுக்கு வழங்கியதாக, வழக்கறிஞர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் சுதாகருக்கு ஜாமின் வழங்கக்கோரி அவரது வழக்கறிஞர்கள் செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த இரண்டாம் தேதி மனு தாக்கல் செய்திருந்தனர். விசாரணை வரும் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இந்தநிலையில் ரௌடி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கியது உட்பட மூன்று வழக்குகள் உள்ளதால், சுதாகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் பரிந்துரை செய்தார் இதனை அடுத்து சுதாகர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேற்று உத்தரவிட்டார்