நெட்ஃபிளிக்ஸில் ”யு” என்ற பெயரிலான வெப் தொடர் உள்ளது. அதை பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும் . கிரைம் திரில்லரா உருவாக்கப்பட்ட அந்த சீரிஸில் அழகாக இருக்க கூடிய ஒரு பையன கொலைக்காரனாக காட்டியிருப்பார் இயக்குநர். அதே போலத்தான் டிக்டாக்கில் பிரபலமாக இருக்கக்கூடிய இளைஞர் ஒருவர் தாய் மற்றும் மகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வசீகரிக்கும் கண்கள் , ஹேண்ட்சமான தோற்றம் என பார்பவர்களை ஒரு நிமிடம் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு இருக்கும் இந்த இளைஞருடைய பெயர் “கேமரூன் ஹேரின்”. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர். இவருக்கு வயது 21 . கடந்த 2018 ஆம் ஆண்டு வரையில் கேமரூன் ஒரு ஸ்ட்ரீட் ரேஸராக இருந்துள்ளார். ஒரு முறை தனது வாகனத்தில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பொழுது, ஜெஸிக்கா என்னும் 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணையும் அவர்களுடைய 21 மாத பெண் குழந்தையான லிலியாவையும் மோதி விபத்தை ஏற்படுத்தினார். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் தாய் மற்றும் மகள் இருவரும் சம்பவ இடத்துலேயே உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் அந்த இளைஞர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, கேமரூன் ஒரு பக்கம் டிக்டாக்கில் கலக்கி வந்துள்ளார் . இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம் என கூறப்படுகிறது. இப்போ நடந்த இறுதி விசாரணையின் போது தான் செய்த குற்றத்தை கேமரூன் ஒத்துக்கிட்டாரு. இதனால் அவருக்கு தண்டனைய குறைத்து வழங்கியிருக்காங்க நீதிமன்றம். எவ்வளவு ஆண்டுகள் தெரியுமா? 30 ஆண்டுகள் கொடுத்திருக்க வேண்டிய தண்டனையை தற்போது 24 ஆண்டுகளாக குறைத்துள்ளனர் நீதிபதிகள்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அவரோட டிக்டாக் ரசிகர்கள் அவர் செய்த டிக்டாக் வீடியோவை எல்லாம் கலெக்ட் செய்து, சோகமா பாடல்களை போட்டு , #CameronHerrin அப்படிங்குற பெயர்ல தங்களோட ஆதங்கத்தை வெளிப்படுத்தினாங்க. குறிப்பா சார்லி புத் என்ற பாடகர் பாடி, செலினா கோம்ஸ் நடித்திருந்த இண்டிபெண்டட் ஆல்பமான , ”வி டோண்ட் டாக் எனிமோர் “ பாடலை பிண்ணனியில இசைக்கவிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சார்லி புத் ட்விட்டரில்,” இது போன்ற கேவலத்துக்கெல்லாம் என் பாட்டை பயன்படுத்தாதீங்கன்னு”காட்டமா தெரிவித்துள்ளார். கெமரூன் தனது இளம் வயதில் செய்த தவறுக்காக அவரை வாழ் நாள் முழுதும் சிறையில் கழிக்க வேண்டுமா என பலரும் கேமரூனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இன்னும் சிலரோ அழகாக , அப்பாவியா இருக்கும் இவருக்கு மறு வாய்ப்பு கொடுக்கலாமே என சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். அழகாக இருந்தால் குற்றவாளிகள் தப்பிக்க வேண்டுமா என்ன என சிலர் கேள்வியும் எழுப்பி வருகின்றனர். கேமரூனுக்கு தண்டனை வழங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.