பாரதிய ஜனதா கட்சி மத்திய சென்னை மாவட்ட எஸ்.சி-எஸ்.டி அணித்தலைவர் பாலச்சந்தரை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சென்னை காவல்துறை கிழக்கு இணை ஆணையர் பிரபாகர் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையர் பகலவன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு ஐ.பி.எஸ். நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, இவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதால் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு (PSO) இருக்கும்போதே அவரை 6 பேர்கொண்ட சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பியோடியுள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் சிந்தாதிரிப்பேட்டையில் கொலை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த பாலசந்தர்?
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் பாலசந்தர்(30) இவர் பாஜகவில் எஸ்சி-எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்தார்.
முன்னதாக, பாலசந்தருக்கு கொலை அச்சுறுத்தல் காரணமாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இரவு பாலசந்தர் தனது பி.எஸ்.ஓ பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவுக்கு சென்ற பாலசந்திரன் அங்கு நண்பர் சிலருடன் பேசி கொண்டிருந்தார்.
அங்கு பாலசந்தர் பேசிக்கொண்டிருந்தபோது பி.எஸ்.ஓ பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதனை பார்த்து ஓடிவந்த பி.எஸ்.ஓ உடனே காவல்துறையினருக்கு தகவல்தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் பாலசந்தர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.காவல்துறை பாதுகாப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வைத்து பாஜக பிரமுகரை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்