சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சார்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.

Continues below advertisement

இருவருடைய திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், பிரியாணி வாங்குவதில் அபிராமிக்கும் பிரியாணி கடையை சேர்ந்த, ஊழியர் மீனாட்சி சுந்தரம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவருடைய நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

உல்லாசமாக இருக்க குழந்தைகளை கொலை செய்த அபிராமி

இதுகுறித்து அபிராமி குடும்பத்தினருக்கு தெரிய வரவே, "உனக்கு திருமணம் நடைபெற்று விட்டது, குழந்தைகளும் இருக்கிறார்கள் இது போன்ற தவறான பாதைக்கு செல்லாதே" என கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரம் இருவரும் குழந்தை மற்றும் கணவர் ஆகிய இருவரையும் கொலை செய்துவிட்டு கேரளாவிற்கு தப்பிச் செல்ல முடிவெடுத்தனர்.

Continues below advertisement

செப்டம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டு, பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, குழந்தைகள் இருவரையும் அபிராமி கொலை செய்தார். இது தொடர்பான ஆடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அபிராமி கேரளாவிற்கு தப்பிச்செல்ல முயற்சி செய்தபோது, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

இது தொடர்பான வழக்க செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு காஞ்சிபுரத்தில் மகிளா நீதிமன்றம் துவங்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து வழக்கு காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

ஆய்வாளரை கண்டித்த நீதிபதி 

குற்றவாளி அபிராமியை நீதிமன்றத்தில் உரிய நேரத்தில்  ஆஜர் படுத்தாததால், குன்றத்தூர் ஆய்வாளர் மீது நீதிபதி செம்மல் கண்டனம் தெரிவித்தார். ஆய்வாளர் மீது 174,175,176 ஆகிய  3 பிரிவின் கீழ் கடமையை செய்யாதது, கடமையை மீறுதல் உள்ளிட்ட வழக்குக்கு பதில் அளிக்க கோரி நீதிபதி செம்மல் தெரிவித்த நிலையில்,  ஆய்வாளர் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என தெரிவித்தார்‌‌. இதனை அடுத்து, நீதிபதி இது போன்ற காரணங்களை இனி தெரிவிக்க கூடாது, முதலும் கடைசியுமாக இருக்கட்டும் என்று எச்சரித்தார். 

பிறகு தீர்ப்பினை வழங்க தொடங்கினார். அபிராமி மற்றும் காதலன் மீனாட்சிசுந்தரம் இருவரும் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். ஏற்கனவே ஏழு ஆண்டுகள் சிறையில் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு அபிராமி மற்றும் மீனாட்சிசுந்தரம் இருவரும் கோரிக்கை வைத்தனர். 

காவலர்களை கண்டித்த நீதிபதி 

நீதிமன்றம் வளாகத்திற்கு வந்திருந்த அபிராமி துப்பட்டாவால் முகத்தை மூடி அழித்துவரப்பட்டார். ஏன் குற்றவாளிக்கு துப்பட்டாவை வழங்கினார்கள் என காவலர்களை பார்த்து நீதிபதி கோபத்துடன் கேள்வி எழுப்பினார். துப்பட்டாவால் கழுத்தை நெரித்து தற்கொலை செய்ய நேரிடும், இதனை அனுமதிக்க கூடாது என காவலர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுத அபிராமி 

இருவரும் சேர்ந்து செய்த குற்றத்தை வைத்து பார்க்கும்போது, இருவருக்கும் ஆயுள் தண்டனை மட்டும் வழங்கினால் போதுமானதாக இல்லை என நீதிபதி கருத்து தெரிவித்தார். இருவருக்கும் ஆயுள் தண்டனையும் மற்றும் வாழ்நாள் வரை சிறை தண்டனை என்ற தீர்ப்பை அறிவித்தார். 

இறுதி மூச்சு உள்ளவரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததை ஒட்டி அபிராமி நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுதார். அதேபோன்று கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரமும் அழுத காட்சிகளை பார்க்க முடிந்தது. குழந்தைகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாகிய நிலையில், காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.