Hondas New Hybrid SUV: ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவிக்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்த உள்ளது.
ஹோண்டாவின் ஹைப்ரிட் பிளான்:
இந்தியாவில் ஹைப்ரிட் கார்கள் மீதான மோகம் என்பது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை உணர்ந்தே மாருதி சுசூகி, ஹிண்டாய், கியா, மஹிந்திரா மற்றும் டாடா ஆகிய முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் கூட, தங்களது ஹைப்ரிட் போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தான் உள்நாட்டில் ஏற்கனவே e:HEV ஹைப்ரிட் செடானை விற்று வரும் ஹோண்டா, போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தனது ஹைப்ரிட் கார் மாடல்களின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்காக ZR-V, எலிவேட் மற்றும் முற்றிலும் புதிய 3 இருக்கை எஸ்யுவி கார் மாடல்களை ஹைப்ரிட் எடிஷனில் சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளது.
ஹோண்டாவின் 3 புதிய ஹைப்ரிட் கார்கள் வெளியீடு:
ZR-V கார் மாடல் தற்போது இந்திய சந்தையில் வெளியிடுவதற்காக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எலிவேட்டின் ஹைப்ரிட் எடிஷன் 2026ம் ஆண்டிம் இரண்டாம் பாதியில் உள்நாட்டு சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். ஹுண்டாயின் முற்றிலும் புதிய 3 வரிசை இருக்கை அமர்வை கொண்ட பிளாஃஷிப் கார் மாடல் 2027ம் ஆண்டில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கார்கள் தொடர்பாக இதுவரை வெளியாகியுள்ள விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. ஹோண்டா ZR-V ஹைப்ரிட்
சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹோண்டாவின் ZR-V கார் மாடலுக்கு ஒப்புதல் கிடைத்தால், நடப்பாண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்நாட்டு சந்தையில் விற்பனைக்கி வரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த காரானது முற்றிலும் கட்டமைக்கப்பட்ட இறக்குமதி ஹைப்ரிட் கார் மாடலாகவே கொண்டு வரப்படும். இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இரண்டு மின்சார மோட்டார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மின்சார CVT கியர்பாக்ஸ் உடன் இணைந்து 180bhp ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது.
ப்ரீமியம் கார் மாடலாக விற்பனைக்கு வருவதால், இதில் ஏராளமான மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 9 இன்ச் டச்ஸ்க்ரீன், ஹோண்டா கனெக்ட் நேவிகேசியன் சிஸ்டம், 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், டூயல் ஜோன் ஆட்டோமேடிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்ஸ், மெமரி ஃபங்சனுடன் கூடிய பவர் அட்ஜெஸ்டபள் ட்ரைவர் சீட் மற்றும் ஹோண்டாவின் பிரத்யேகமான ADAS தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறலாம்.
வெளிநாட்டில் இந்த காரின் டாப் எண்ட் வேரியண்டின் விலை இந்திய மதிப்பில் ரூ.41.50 லட்சமாக உள்ளது. இறக்குமதி வரியை கணக்கில் கொண்டால் இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு வரும்போது, அதன் விலை 50 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. ஹோண்டா எலிவேட் ஹைப்ரிட்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ஹோண்டாயின் எலிவேட் எடிஷன் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம் என பல தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இந்த மிட்-சைஸ் எஸ்யுவி உள்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டால், e:HEV செடானில் உள்ள அதே பவர்ட்ரெயின் ஆப்ஷன் அப்படியே பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் iVTEC பெட்ரோல் இன்ஜின் ஆனது, மின்சார மோட்டர் மற்றும் பேட்டரி பேக்குடன் இணைக்கப்படும்.
தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் எதிர்பார்க்க முடியாத சூழலில் கூடுதலாக “ஹைப்ரிட்” பேட்ஜ் மட்டுமே வழங்கப்படலாம். கேபின் லே-அவுட் மற்றும் அம்சங்கள் அப்படியே, பெட்ரோல் எடிஷனில் இருப்பதை போன்றே தொடரும். பெட்ரோல் எடிஷனின் விலையே ரூ.11.91 லட்சம் முதல் ரூ.16.83 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. எனவே, ஹைப்ரிட் எடிஷனின் தொடக்கவிலையே 20 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. ஹோண்டா 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவி
ஹோண்டா நிறுவனத்தின் புதிய PF2 பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் முதல் கார் மாடலாக இந்த 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவி இருக்கும். நிறுவனத்தின் கார் மாடல்களில் எலிவேட்டிற்கு மேலே நிலைநிறுத்தப்பட்டு, விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ரெனால்ட் டஸ்டர், ஹுண்டாய் மற்றும் கியாவின் புதிய மூன்று வரிசை இருக்கை எஸ்யுவிக்கு போட்டியாக களமிறங்க உள்ளது. இந்த காரின் உற்பத்தி 2027ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் தொடங்கக் கூடும். இதில் இடம்பெற உள்ள இன்ஜின் ஆப்ஷன் தொடர்பான விவரங்கள் ஏதும் உறுதிபட தெரியாவிட்டாலும், 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் - ஹைப்ரிட் செட்-அப்பை கொண்டிருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எலிவேட்டிற்கு மேலும் நிலைநிறுத்தப்படும் என்பதால், விலை 30 லட்ச ரூபாய் வரை நீட்டிக்கப்படலாம்.
Car loan Information:
Calculate Car Loan EMI