பீகார் மாநிலம் பாட்னாவின் கன்கர்பாக் காவல் நிலையப் பகுதியில் பட்டப் பகலில் , மக்கள் நடமாடும் பகுதியில் சிலர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவமானது, இன்று பிற்பகல் 2 மணிக்கு ராம் லகான் பாத் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.
” இச்சம்பவம் குறித்து காவல்துறை தரப்பு தெரிவித்ததாவது, “ இன்று பிற்பகல் ராம்லகான் சாலையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது, அதைத் தொடர்ந்து அருகிலுள்ள காவல் நிலையங்களில் இருந்து உள்ளூர் காவல்துறையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். இதையடுத்து, குற்றவாளிகள் வீட்டிற்குள் பதுங்கிய வீட்டை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். STF குழுவும் இங்கு வந்து, இந்த கட்டிடம் மற்றும் அருகிலுள்ள கட்டிடங்களை சோதனையிட்டது. நான்கு பேரை பிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என்று பாட்னா எஸ்எஸ்பி அவகாஷ் குமார் கூறினார்.
இந்நிலையில், இந்த சம்பவத்தின் காணொளிகள் இணையத்தில், வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரிகள் குண்டு துளைக்காத ஆடை ( bullet proof jacket ) மற்றும் துப்பாக்கிகளுடன் இருப்பதை காண முடிகிறது. அதைச் சுற்றியுள்ள பல காவல் நிலையங்களில் இருந்தும், காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. பீகார் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை குழுவுடன் பாட்னா எஸ்எஸ்பி உட்பட மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இச்சம்பவத்தில் நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையில், சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பகல் பொழுதில் தலைநகர் பாட்னாவில் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவமானது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.