UPSC CSE 2025: இன்றே கடைசி; ஐஏஎஸ், ஐபிஎஸ்… இந்திய ஆட்சிப் பணிகளுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? இதோ வழிகாட்டல்!

யூபிஎஸ்சியில் எந்தத் தேர்வில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் முதலில் இருந்து எழுத வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

Continues below advertisement

Civil Services Examination (CSE) 2025: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமையியல் பணிகளுக்கு நடத்தப்படும் யூபிஎஸ்சி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.

Continues below advertisement

இந்திய ஆட்சிப் பணிகளில் சேர நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்றே (பிப்.18) கடைசித் தேதி ஆகும். ஜனவரி 22ஆம் தேதி இவர்களுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு, இன்று கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 25 முதல்நிலைத் தேர்வு 

979 காலி இடங்களை நிரப்ப இந்த ஆண்டுக்கான யூபிஎஸ்சி தேர்வு நடத்தப்படுகிறது. மே 25ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தேர்வு முதல்நிலை, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் எந்தத் தேர்வில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் முதலில் இருந்து எழுத வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

விண்ணப்பிப்பது எப்படி?

 

  • தேர்வர்கள்http://upsconline.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
  • தொடர்ந்து ஒரு முறை விண்ணப்பப் பதிவு (OTR) தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள், தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

https://upsc.gov.in/content/important-notice-cse-and-ifos-examination-2025  என்ற இணைப்பில் தேர்வு தொடர்பான விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டு உள்ளன.

தேர்வர்கள் ஏதேனும் உதவி, சந்தேகம், விளக்கம் ஆகியவற்றைத் தீர்க்க யூபிஎஸ்சி மையத்தின் சி வாயிலுக்கு நேரடியாகச் சென்று காணலாம். அல்லது, 011- 23385271 / 011-23381125 / 011- 23098543 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் ஒரு முறை விண்ணப்பப் பதிவில் (ஓடிஆர்) ஒருமுறை மட்டுமே மாற்றம் செய்ய முடியும் என்னும் முக்கிய விதிமுறையை யூபிஎஸ்சி அண்மையில் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் விவரங்களுக்குwww.upsc.gov.in

Continues below advertisement
Sponsored Links by Taboola