சண்டிகரில் 18 வயது பள்ளி மாணவியை கழுத்தை நெரித்து கொன்றதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த 25 வயது நபரை சண்டிகர் போலீசார் கைது செய்துள்ளதுள்ளனர்.
போலீசார் அளித்த தகவலின் படி, குற்றவாளி முகம்மது ஷாரிக் (Mohammed Sharik) என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவர் திருமணமானவர் என்றும் திருமணத்திற்குப் புறம்பான உறவில் தன்னுடன் இருக்குமாறு சிறுமிக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட 18 வயது பெண், அவர் திருமணமானவர் என்று தெரிந்ததும் அவருடன் பேசுவதை தவிர்த்தார். ஆனால், ஷாரிக் அப்பெண்ணிடம் அத்துமீறியுள்ளார். அவர் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அந்த நபர் அப்பெண்ணை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கொலைக்குப் பிறகு தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளியை செக்டார்-43 பேருந்து நிலையத்தில் இருந்து கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஷாரிக் வசிக்கும் அதே பகுதியில் வாடகை வீட்டில் தனது தாய் மற்றும் தம்பியுடன் 12 ஆம் வகுப்பு மாணவி, வசித்து வந்தார். ஆனால் சிறுமியின் கொலைக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
நவம்பர் 19 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் பள்ளிக்குச் சென்றபோது, வீட்டு வேலை செய்யும் அவரது தாயார் வேலைக்காக வெளியே சென்றிருந்தபோது இந்த கொலை சம்பவம் நடந்திருக்கிறது. மதியம் வீடு திரும்பிய அப்பெண்ணின் சகோதரர் வீட்டின் கதவு திறந்து கிடந்ததைக் கண்டார், மாணவி படுக்கையில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் தனது தாயை அழைத்தார், மேலும் சிறுமியை பக்கத்து வீட்டாரின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தினர். இதையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இத தொடர்பான விசாரணையின் விவரம்:
"ஷாரிக் சிறுமியின் வீட்டிற்குச் சென்று வெளியே வருவதைப் பார்த்தபோது அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் பிடிபட்டார். தற்போது வரை இவ்வழக்கில் ஏதும் கூற இயலாது என்றும், பிரதேச பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தீவிர விசாரணையின் அடிப்படையில் எதுவும் சொல்ல முடியும் என்று டி.எஸ்.பி. ராம் கோபால் (DSP Ram Gopal) தெரிவித்தார்.
குற்றவாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர், பீகாரைச் சேர்ந்தவர், ஒரு உணவகத்தில் உணவு விநியோகிப்பவராக வேலை செய்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்படுள்ளது.