Watch Video : ஒரு லட்சம் ரொக்கம்.. தங்க செயின் இப்போவே வரணும்.. திருமண மேடையில் மணமகளை மிரட்டிய கொடூரம்.. வைரல் வீடியோ

வரதட்சணை தரவில்லை என்பதால் மணமகன் தன்னுடைய திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

திருமணங்களில் பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதில் திருமணத்தின் போது வரதட்சணை தரவில்லை என்று மணமகன் திருமணத்தை நிறுத்தும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

பீகார் மாநிலத்தின் சப்பல்பூர் கிராமத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வரும் ஒருவருக்கும் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அந்தத் திருமணத்திற்கு மணமகன் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டுள்ளதாக தெரிகிறது. மணமகன் கேட்ட வரதட்சணையில் சிலவற்றை மணமகள் குடும்பத்தினர் தரவில்லை என்பதால் திருமண நாளன்று மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். 

அப்போது அவர் பேசிய வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “திருமணத்திற்காக நாங்கள் கேட்ட வரதட்சணையை நீங்கள் தரவில்லை. ஆகவே இன்று அதை முழுவதுமாக தரவில்லை என்றால் நான் என்னுடைய உறவினர்களுடன் திருமணத்தை நிறுத்திவிட்டு சென்றுவிடுவேன் என மணமகன் கூறினார். அதற்கு அந்த மணமகள், “நாங்கள் இன்னும் ஒரு லட்சம் ரூபாய் தான் தரவேண்டும். அதை விரைவில் தந்துவிடுகிறோம்” எனக் கூறினார். 

இதை ஏற்க மறுத்த மணமகன், “ஒரு லட்சம் ரூபாய் மட்டுமல்ல அத்துடன் நீங்கள் நான் கேட்ட மோதிரம் மற்றும் தங்க சங்கலி ஆகியவற்றை இன்னும் தரவில்லை. அவை அனைத்தையும் இப்போதே தரவேண்டும். இல்லையென்றால் இந்த திருமணம் நடைபெறாது” எனக் கூறி மிரட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. திருமண நாளன்று வரதட்சணை தரவில்லை என்று மணமகன் திருமணத்தை நிறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola