பிகார் மாநிலத்தில் பள்ளி மாணவி ஒருவர் தனது தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் வீடியோவை அவரே பதிவு செய்து வெளியிட்ட பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.


பிகார் மாநிலம் சமஸ்திபூரில் உள்ள ரோசேரா என்ற பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 18 வயதான மகள் உள்ள நிலையில், அந்த பெண்ணை அவரது தந்தையே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி துன்புறுத்தும் அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடைபெற்று வந்துள்ளது. ஆனால் அதற்காக நீதி கேட்பதற்கு அந்த பெண் இறங்கிய வழிதான் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தன் சொந்த தந்தையே இப்படி செய்கிறார் என்பதை வெளியில் சொன்னால் நம்புவார்களோ மாட்டார்களோ என்ற எண்ணத்தில் அந்த மாணவி இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.



தனக்கு நேரும் அநீதியை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மாணவி, நீதி கேட்டு போராட முடிவு செய்துள்ளார். ஆனால் அதற்கும் ஆதாரம் கேட்கும் சமூகத்தில் வாழ்கிறோம் என்று வருந்திய அவர் அதையும் தயார் செய்யும் முடிவுக்கு வந்துள்ளார். அதனை தொடர்ந்து தனது தந்தை அடுத்தமுறை தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் போது அதை அவருக்கே தெரியாமல் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நீதி கேட்டுள்ளார். அவர் நீதி கேட்டு வெளியிட்ட வீடியோ பலரால் பார்க்கப்பட்டது. மாணவி வெளியிட்ட அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிய நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த டி.எஸ்.பி சஹியார் அக்தர், அந்த பெண்ணின் புகாரை ஏற்று வழக்கு தொடர்ந்து எப்.ஐ.ஆர் பதிவிட்டுள்ளார்.



குற்றம் புரிந்த அந்த மாணவியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சட்ட ரீதியாக தண்டனை பெற்று தர காவல்துறை உறுதி பூண்டுள்ளது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் வெளியில் சொல்ல பயந்ததற்கு காரணம் இதில் மேலும் பலர் சம்மந்தப்பட்டிருப்பதால்தான் என்று சந்தேகித்ததாகவும், அதன்படி விசாரணை நடத்தியதாகவும் கூறினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயரும், பெண்ணிண் மாமாவும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதாக முதற்கட்ட விசரணையில் ஏற்கனவே தெரியவந்துள்ள நிலையில், மேலும் இந்த குற்றச் சம்பவத்தில் வேறு நபர்களும் உடந்தையாக உள்ளார்களா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தனது தாயாரும் தந்தைக்கு ஆதரவாக இப்படி செய்கிறார் என்பதாலேயே ஆதாரத்தை வலுவாக்குவதற்காக அந்த மாணவி இப்படி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி உள்ளார் என்று டி.எஸ்.பி சஹியார் அக்தர் குறிப்பிட்டார்.