காதலியின் குடும்பத்தாரால் அடித்துக் கொல்லப்பட்ட காதலனின் உடல், காதலியின் வீட்டின் முன்பு தகனம் செய்யப்பட்ட நிகழ்வு பீகாரில் அரங்கேறியுள்ளது.


பீகார் மாநிலம் முசார்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுவனும், சிறுமியும் காதலித்துள்ளனர். இவர்கள் காதல் செய்வது சிறுமியின் வீட்டிற்கு பிடிக்கவில்லை. இதனால், சவுரப்குமார் என்ற அச்சிறுவனை சிறுமியின் குடும்பத்தினர் அடித்து, சிறுவனைன் பிறப்புறுப்புகளை சிதைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. காந்தி காவல் நிலையத்தின் கீழ் உள்ள ராம்பூர் சா கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இந்த கொடூர சம்பவம் நடைபெற்றதாகவும், அச்சிறுவன் சிகிச்சை பலனிளிக்காமல் உயிரிழந்துவிட்டதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக ஏஎன்ஐ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள 48 விநாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு வீட்டினுள் நூற்றுக்கணக்கானவர்கள் நடந்து செல்வதையும், வீட்டின் முன்பு ஒரு சடலம் எரிந்து கொண்டிருப்பதையும் காட்டுகிறது. சிறுவனின் தகனத்திற்குப் பிறகு கிராமத்தில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






 


காதல் விவகாரத்தில் அந்த சிறுவன் கொல்லப்பட்டதாகவும், சிறுவனின் பிறப்புறுப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக முசாபர்பூர் (நகர) போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் குமார் கூறியுள்ளார். இந்த வழக்கில் பிரதான குற்றவாளியான சுஷாந்த் பாண்டே உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.


“இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் சனிக்கிழமை முசாபர்நகரில் உள்ள ஒரு சுஷாந்த் பாண்டேவின் வீட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமையை சீர்குலைத்தனர். போலீசார் விரைவாக செயல்பட்டு சவுரப்குமாரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட சுஷாந்த் பாண்டேவை கைது செய்தனர்" என்று போலீசார் தெரிவித்தனர். 


இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், சிறுமியின் தந்தை சுஷாந்த் பாண்டே மற்றும் அவரது மகன் தன்னையும், குடும்பத்தினரையும் மிரட்டினார்கள். சிறுமியும், மகனும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். ஆனால், அதற்கு சிறுமியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ​​நாங்கள் எங்கள் மகனை வேலைக்காக வேறு ஊருக்கு அனுப்பினோம். சம்பவம் நடந்தபோது அவர் தனது சகோதரியின் திருமணத்திற்காக ஊரில் இருந்தார். சிறுமியின் சகோதரர் தனது மகனை தனது வீட்டிற்கு அழைத்து, மற்றவர்களுடன் சேர்ந்து மகனை அடித்தனர். சிறுமியின் சகோதரர், தந்தையை அழைத்து, ஒரு அறிக்கையில் கையெழுத்திட சொல்லி என் காதில் துப்பாக்கியை வைத்து மிரட்டி மகனை உயிருடன் ஒப்படைத்தனர்” என்று கூறினார். 


Cybercrime | ஆன்லைன் திருட்டு நடப்பது இப்படித்தான்... எச்சரிக்கும் போலீசார்!