நடிகர்களின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாவது எப்போதுமே சர்ச்சைகுள்ளானதாக இருக்கும். இதில் அண்மையில் போஜ்பூரி நடிகர்கள் சிக்கி உள்ளனர். போஜ்புரி பாடகியான ஷில்பி ராஜின் அந்தரங்க வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இதை அடுத்து அந்த வீடியோவைப் பகிர வேண்டாம் என அவர் கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது அந்தரங்க வீடியோ கசிந்துள்ளது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. சமீபத்தில், பாடகர் ஷில்பி ராஜ் மற்றும் அவரது காதலன் ஆட்சேபனைக்குரிய நிலையில் இருப்பது போன்ற ஒரு வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. இந்த வீடியோ கிளிப் இணையத்தில் வந்தவுடன், அது வைரலானது. இதை அடுத்து ஷில்பி ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்,
அதில்.. உடைந்து அழுத அவர் கசிந்த வீடியோவை மீண்டும் பகிர வேண்டாம் என்று நெட்டிசன்களை கெஞ்சி கேட்டுக் கொண்டுள்ளார். 'என்னுடைய சூழல் மகிழ்ச்சியானதாக இருந்தது. எனக்கு இங்கேதான் திருமணமும் நடந்தது, ஆனா நான் தற்போது மகிழ்ச்சியாக இல்லை. நான் வித்தியாசமாக உணர்கிறேன்' என ஷில்பி பகிர்ந்துள்ளார். மேலும் தான் ஒரு சதித்திட்டத்திற்கு இரையாகிவிட்டதாக சுட்டிக்காட்டிய அதே வேளையில், அந்த வீடியோவை நீக்கிவிட்டு மறுபகிர்வு செய்ய வேண்டாம் என்று நெட்டிசன்களை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'நான் பாடகியாக முன்னேறியது எனது உழைப்பு மட்டுமல்ல. நீங்கள் என்னை முன்னே உயர்த்திக் கொண்டு வந்தீர்கள். உங்கள் அன்பு எனக்கு கிடைத்தது. நான் பள்ளியிலிருந்தே பாடிக் கொண்டிருக்கிறேன். இப்போது கொஞ்சம் பெயரும் புகழும் இருப்பதால் எனக்குப் பிரச்னைகள் வர ஆரம்பித்துள்ளன.' எனக் கண்ணீருடன் அவர் பகிர்ந்துகொண்டார்.
'நீங்கள் ஏன் எனது அந்தரங்க வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றுகிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை. மக்கள் கேவலமான கருத்துக்களை அதில் பதிவிடுகிறார்கள், உங்கள் காதலன் யார் என்று மக்கள் கேட்கிறார்கள். தயவுசெய்து அந்த வீடியோவை நீக்கவும்.' என அவர் கூறியுள்ளார்.
போஜ்புரி சினிமாவில் சமூக ஊடகங்களில் அந்தரங்க வீடியோக்கள் கசிவது இது முதல்முறை அல்ல. முன்னதாக, நடிகை த்ரிஷாகர் மதுவின் அந்தரங்க வீடியோவும் கசிந்தது, அதில் அவர் ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது அவருக்கு பெரிய மன உளச்சலை ஏற்படுத்தியது. அவர் தனது சமூக ஊடகத்தில் அதுகுறித்துப் பகிர்ந்திருந்தார்.