செல்போனில் ஒருவரிடம் பேசியதால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. தனது 31 வயது மனைவியை கொலை செய்ததாக 37 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர், தனது மனைவி யாரிடமோ செல்போனில் பேசுவதைப் பார்த்ததாகவும், அவரிடம் விசாரித்தபோது அவர் சரியாகப் பதிலளிக்கவில்லை என்றும், அதைத் தொடர்ந்து அவர் சண்டையிட்டுக் கொன்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பெங்களூருவின் மகடி சாலையில் உள்ள காமக்ஷிபாளையாவில் உள்ள காவேரிபுராவில் தனது மனைவியைக் கொலை செய்ததாக 37 வயதான வண்டி ஓட்டுநரை கைது செய்தனர். அசோக் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், அவரது மனைவி வனஜாக்ஷி (31) என்பவரைக் கொன்றுவிட்டு தனது வீட்டை விட்டு வெளியேறினார். ஏப்ரல் 17 அன்று இரவு இந்த சம்பவம் நடந்தது. குற்றம் நடந்தபோது தம்பதியரின் குழந்தைகள் துமகுரு மாவட்டத்தில் உள்ள அவர்களின் தாத்தா பாட்டி வீட்டில் இருந்தனர்.
புதன்கிழமை இரவு வனஜாக்ஷியின் சகோதரர் சிவசுவாமி வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீடு பூட்டியிருப்பதைக் கண்டபோது சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அவர், பக்கத்து வீட்டுக்காரர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது வனஜாக்ஷியின் அழுகிய உடலை கண்டெடுத்தார். பின்னர் அவர் அசோக் கொலையில் சந்தேகம் அடைந்து போலீசில் புகார் அளித்தார்.
அசோக் தனது மனைவி மீது சந்தேகம் அடைந்து அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஏப்ரல் 17 அன்று இரவு அசோக் தனது மனைவியுடன் சண்டையிட்டார். “நான் வீட்டிற்கு வந்தபோது, அவர் யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். யார் என்று கேட்டதற்கு சரியாகப் பதிலளிக்கவில்லை. நான் அவருடன் சண்டையிட்டு கொன்றேன்” என்று அசோக் போலீசாரிடம் கூறினார்.
கணவன் அசோக் மனைவியை கொன்றுவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு மகடி அருகே உள்ள நண்பரின் வீட்டுக்குத் தப்பிச் சென்றபோது, அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்