கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வருபவர் ஜாகீர் பாஷா. இவரது மனைவி முபீனா. இருவருக்கும் திருமணமாகி 15 வருடங்கள் ஆகியுள்ளது. இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். ஜாகீர் பாஷா ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு செல்போனில் ஆபாசபடம் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது.


இந்த நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இவர் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளார். அந்த வீடியோவில் இருந்த பெண் ஜாகீர்பாஷாவின் மனைவியைப் போலவே இருந்துள்ளார். இதனால், ஆபாச வீடியோவில் இருப்பது தனது மனைவிதானா? என்று பாஷாவிற்கு சந்தேகம் வந்துள்ளது. இதன் காரணமாக, கணவன் மனைவி இருவருக்கும் இடையே கடந்த இரு மாதங்களாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.




கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஒரு உறவினர்கள் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது பாஷா தனது மனைவி முபீனாவை மோசமாக தாக்கியுள்ளார். இதனால், உறவினர்கள் அனைவருக்கும் இந்த விவகாரம் தெரியவந்துள்ளது. இதனால், கடந்த 4 நாட்களுக்கு முன்பு தம்பதியினர் ராமாநகருக்கு குடிபெயர்ந்தனர். ஆனாலும், அங்கும் இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டே வந்துள்ளது.


இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோபத்தின் உச்சிக்கே சென்ற ஜாகீர்பாஷா வீட்டில் இருந்த கத்தியால் மனைவி முபீனாவை குத்திக் கொலை செய்தார். அப்போது, வீட்டில் அவர்களது ஐந்து குழந்தைகளும் இருந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த முபீனாவின் மூத்த மகன் தனது தாயை தனது தந்தையையே குத்தியதை ஓடிச்சென்று தாத்தாவிடம் கூறியுள்ளார். தனது மகள் கத்தியால் குத்தப்பட்டதை அறிந்த முபீனாவின் தந்தை விரைந்து வந்து பார்த்தபோது முபீனா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார்.




இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முபீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முபீனாவின் தந்தை ஏற்கனவே இதுதொடர்பாக காவல்நிலையத்தில் ஜாகீர்பாஷா மீது புகார் அளிக்கலாம் என்று முபீனாவிடம் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், முபீனாதான் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்துள்ளார். கொலை செயத ஜாகீரை போலீசார் கைது செய்தனர். கணவனே சந்தேகத்தால் மனைவியை தனது குழந்தைகளின் கண் முன்பே குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண