கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூர். இங்கு மருத்துவராக பணியாற்றி வந்தவர் விகாஸ்ராஜன். இவர் உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தவர். உக்ரைனில் மருத்துவ படிப்பு முடித்த பிறகு, சென்னையில் மருத்துவராக பயிற்சி பெற்றார். பின்னர், பெங்களூர் சென்று மருத்துவராக பணியாற்றி வந்தார்.


இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு விகாஸ் ராஜன் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கோமா நிலைக்குச் சென்ற விகாஸ்ராஜன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்றே நாட்களில் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகம் இருந்ததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.




போலீசார் விசாரணையில் அவரை யாரோ தாக்கியதற்கான அடையாளங்கள் அவரது உடலில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணையில் உயிரிழந்த விகாஸ்ராஜன், பிரதிபா என்ற பெண்ணை காதலித்து வந்ததும், அவரை திருமணம் செய்யத் தயாராக இருந்ததும் தெரியவந்தது.


மேலும், விகாஸ்ராஜன் உயிரிழந்தபோது அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், அந்த சண்டையில்தான் அவர் காயமடைந்த பிறகே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தததாகவும் பிரதிபா உயிரிழந்த விகாஸ்ராஜனின் சகோதரர் விஜய்யிடம் கூறியுள்ளார்.


இதையடுத்து, போலீசார் பிரதிபாவிடம் விசாரணை நடத்தினர். அவர் விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீசார் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியது. பிரதிபாவிற்கும், விகாஸ்ராஜனுக்கும் சமூக வலைதளம் மூலமாகவே பழக்கம் ஏற்பட்டுள்ளது.




நட்பாக பழகிய இவர்கள் நாளடைவில் காதலித்துள்ளனர். பெங்களூரில் லிவ் இங் டுகெதர் உறவில் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதமும் தெரிவித்தனர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய நிர்வாண புகைப்படம் இருப்பதை கண்டு பிரதிபா அதிர்ச்சியடைந்தார். மேலும், இந்த புகைப்படத்தை தன்னுடைய காதலன் விகாஸ்ராஜன்தான் பதிவிட்டதையும் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.


இதையடுத்து, விகாஸ்ராஜனுக்கு பாடம் புகட்ட பிரதிபா முடிவு செய்தார். இதையடுத்து, தன்னுடைய நண்பர்கள் கவுதம், சுஷில் மற்றும் சுனில் ஆகிய மூன்று பேரையும் சம்பவத்தன்று பிரதிபா அழைத்துச்சென்றுள்ளார். இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து விகாஸ்ராஜனுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, இவர்கள் நான்கு பேரும் இதுதொடர்பாக விகாஸ்ராஜனிடம் கேட்டபோது அது வாக்குவாதமாக மாறியது.


பின்னர், இந்த வாக்குவாதம் சண்டையாக மாறியது. அப்போது, அங்கே இருந்த வீடு துடைக்கும் மாஃப்பில் இருந்த இரும்பு கம்பியால் விகாஸ்ராஜனை பலமாக தாக்கியுள்ளனர். விகாஸ்ராஜன் மிகவும் மோசமாக தாக்கப்பட்ட பிறகு, அவரை பிரதிபா மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார். அங்கே அவர் உயிரிழந்தார். நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டதால் இளம் மருத்துவரை கொலை செய்த பிரதிபா, அவரது நண்பர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.


மேலும் படிக்க : ரூ.1 லட்சம் சம்பளத்தில் டெலிகாலர் வேலை.... கம்போடியாவில் இளம்பெண்ணை விற்க முயன்ற மோசடி கும்பல்


மேலும் படிக்க : Crime: நடத்தை குறித்து அவதூறாக பேசிய அக்கம்பக்கத்தினர்...விரக்தியில் தீக்குளித்த இளம்பெண்! என்ன நடந்தது?