இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் மற்றும் பியூனுடன் மேலும் இரண்டு நபர்கள் வதோதரா மாவட்டம் வகோடியா நகரில் உள்ள வங்கியின் ஏடிஎம்மில் இருந்து ரூ.10.4 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. புதிதாக வந்த கிளை மேலாளர் வங்கியின் ஏடிஎம்மில் பணப் பதிவேடுகளில் கணக்கில் வராமல் பணம் குறைபதிருந்ததை கண்டறிந்தபோது கிளை மேலாளர் ஹேமந்த்குமார் மீனா, பியூன் ஷைலேஷ் சர்மா மற்றும் வினு மற்றும் சுபம் சிங் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இயந்திரத்தில் போதுமான பணம் இருந்ததாக வங்கி பதிவேடுகள் காட்டியது, ஆனால் ஏடிஎம் பண பெட்டகம் காலியாக இருந்துள்ளது. கடந்த அக்டோபர் 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையான காலப்பகுதியில் இந்த திருட்டு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.



சில நாட்கள் முன்பு தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏடிஎம் வேலை செய்யாமல் போனது. அப்போது ஏடிஎம் செயலிழப்பதற்கு ஒரு நாள் முன்னர்தான் பணம் இயந்திரத்தில் டெபாசிட் செய்யப்பட்டது. செய்ததும் அடுத்த நாளே இயந்திரத்தில் பணம் இல்லாத காரணத்தால் வேலை செய்யவில்லை. ஆனால் கணக்கு பதிவேடுகளில் பெட்டகத்திப் பணம் இருப்பதாக காட்டியதால் சந்தேகித்த அலுவலக அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். "இயந்திரத்தை வலுக்கட்டாயமாக திறக்கவோ அல்லது சேதப்படுத்தவோ முயற்சிக்கவில்லை என்பதால் கடவுச்சொல்லை அறிந்த சில உள் நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பது போல் தெரிகிறது," என்று இன்சார்ஜ் இன்ஸ்பெக்டர் ஜே ஜி தேசாய் கூறியிருந்தார். ஏடிஎம் மையத்தின் பணப்பெட்டி சாவி மற்றும் கடவுச்சொல் மூலம் திறக்கப்பட்டுள்ளதாகவும், இவை இரண்டும் கிளை மேலாளரிடம் இருப்பதாகவும் வங்கி அதிகாரிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். 



அதனை தொடர்ந்து கிளை மேலாளர் மற்றும் பியூன் மீது அவர்களின் அலட்சியம் அல்லது அவர்கள் திருட்டில் ஈடுபட்டதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. "குற்றம் சாட்டப்பட்ட மற்ற இரண்டு நபர்கள் இயந்திரத்தை பழுதுபார்க்க வந்த தொழில்நுட்ப வல்லுநர்கள்" என்று இன்ஸ்பெக்டர் தேசாய் கூறினார். போலீஸ் எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளும் இன்னும் கைது செய்யப்படவில்லை. இன்னும் தீவிரமாக விசாரணை நடத்திய பிறகு முழுமையான தகவல்கள் வெளியில் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். வங்கிகளில் அதிக திருட்டுக்களை பார்த்துள்ளோம், வெளியில் இருந்து வரும் திருடர்கள் திட்டமிட்டு திருடுவதை தடுப்பதே பெரிய வேலையாக இருக்கும்போது, பணத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் இதுபோன்ற திருட்டில் ஈடுபடுவது மக்களுக்கு அரசின் மீதும், பாதுகாப்புகள் மீதும், சட்ட ஒழுங்கு மீதும் அவநம்பிக்கையை உண்டாக்கும். அதனை ஏறப்படாமல் வைத்துக்கொள்வதுதான் நம் போன்ற அதிகாரிகளின் கடமை என்று அறிவுரை கூறினார்.