ஆசிரமம்
திருவண்ணாமலை நகரில் செங்கம் சாலையில் புகழ்பெற்ற ஆசிரமம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தொடந்து வந்து பாடல்கள் பாடியும், வழிபாடு நடத்தி வருகின்றார். இவர் மட்டும் அல்லாது பல வெளிநாட்டினர், பல உயர் அதிகாரிகள் நீதிபதிகள் என பல தரபட்ட உயர் பதவியில் உள்ளவர்களும் இங்கு அடிக்கடி வந்து வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புகழ்பெற்ற இந்த ஆசிரமத்திற்கு கடந்த இருபது ஆண்டுகளாக தொடந்து வரும் பெங்களுர் பசவனகுடி பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் அஷோக் ஷங் மற்றும் அவரது மனைவி சுனிதா திமே கௌடா என்பவர்கள் சாமி தரிசனம் செய்தும் அங்கு நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றும்,மேலும் ஆசிரமம் சார்பில் அங்கு உள்ள நிர்வாகிகள் கோரிக்கையின் பேரில் பல வித உதவிகள் மற்றும் பல லட்சம் செலவில் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்து வருகின்றார்.
பாலியல் தொல்லை
இந்நிலையில் அன்னதானம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ஆசிரம நிர்வாகம் செய்து வரும் சிவதாஸ் கிருஷ்ணன் மற்றும் சுகுமார் ஆகியோர் சுனிதா திமே கௌடாவிடம் அன்னதானம் செய்யகூடாது என்றும் பல விதத்திலும் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி ஆசிரமத்திற்கு தரிசனம் செய்ய சென்ற போது அங்கிருந்த ஒரு சன்னதி முன்பு ஆசிரமத்தை சேர்ந்த நபர் பாலியல் சைகை காண்பித்தார் என்றும்,
பின்னர் அங்கிருந்த காவலாளி எனது கையை பிடித்து இழுத்தார். அப்போது அவரது கையை தட்டி விட்டு சென்று விட்டேன் எனவும் சுனிதா திமே கௌடா குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும்,
தன்னிடம் அத்து மீறி அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும்,தனக்கு மட்டும் அல்லாது ஆசிரமத்திற்கு பல பெண்களுக்கும் இந்த ஆசிரமத்தில் தொல்லை கொடுத்து வருவதாகவும், இது குறித்து ஆசிரம நிர்வாகிகள் ஜெயந்தி பிரேம்குமார்,பிரேம் குமார் உள்ளிட்டவர்களிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், அந்த ஆசிரமத்தில் சிவபக்தைகளிடமும், ஆசிரமத்தில் பணிபுரியும் பெண்களிடமும் பாலியல் கொடுமைகள் செய்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கஞ்சா
மேலும் பேசிய அவர், ’’ஒரு நேர்மையான பெண் போலீசார் அதிகாரியை நியமித்து விசாரணைகள் செய்தால் பல பாலியல் கொடுமைகள் பற்றிய விவரம் தெரியவரும். ஆசிரமத்தில் உள்ளவர்கள் பலர் கஞ்சாவை தொடந்து உபயோகம் படுத்திகின்றனர். ஆசிரமத்தில் உள்ளவர்களே கஞ்சாவை விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்தும் தான் திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். தனது புகாரின் அடிப்படையில் நாளை விசாரணை நடக்கவுள்ளது என்றார்
அப்போது அவருடன் திருவண்ணாமலையை சேர்ந்த வக்கீல் மற்றும் சுப்ரீம் கோர்டு வக்கீலும் இருந்தனர். இந்த குற்றச்சாட்டுகளால் அந்த ஆசிரமத்தின் நடவடிக்கைகளில் பக்தர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறோம் என்றார்.