பெங்களூர் அருகே அக்குபங்சர் டாக்டர் எனக் கூறி பெண்களுக்கு பாலியல்தொல்லை கொடுத்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர் யஷ்வந்தபுரத்தை சேர்ந்தவர் வெங்கடரமணா. இவர் அதே பகுதியில், அக்குபங்சர் டாக்டராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நோய் என்று வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது வீட்டு அருகே சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து அதை க்ளினிக் போல் நடத்தி வந்துள்ளார்.
இந்தநிலையில், தனது க்ளினிக் வரும் பெண்களிடன் அக்குபங்சர் சிகிச்சை அளிப்பதாக கூறி அத்துமீறியுள்ளார். எப்படி என்றால், பெண்களுக்கு அக்குபங்சர் சிகிச்சை அளிப்பதற்காக அவர்களது ஆடைகளை கழற்றிவிட்டு, அவர்களின் அந்தரங்க உறுப்புகளை தொட்டு அத்துமீறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பெண்கள் ஆடைகளை கழட்டி சிகிச்சை பெறும்போது அவர்கள் அரைகுறை நிலையில் இருக்கும்போது அதை வீடியோவாக எடுத்துள்ளார். இதுபற்றி அங்கு சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு தெரியவர அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் பசனகுடி மகளிர் காவல் நிலையம் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலி டாக்டர் வெங்கடரமணா மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கானது மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு கைமாறியது. அதன்பேரில், அவர்கள் விசாரணை நடத்தியதில் போலி டாக்டர் வெங்கடரமணாவை கைது செய்தனர். வெங்கடரமணாவின் செல்போனை கைப்பற்றிய மத்திய காவல்துறை சோதனை நடத்தியதில், 36 ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலி டாக்டர் வெங்கடரமணாவிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
குற்ற வகைகள் |
2019-ல் பதிவானவை | 2020-ல் பதிவானவை | 2021-ல் பதிவானவை |
பாலியல் பலாத்காரம் | 370 |
404 | 442 |
வரதட்சணை மரணம் | 28 | 40 | 27 |
கணவர் மற்றும் அவரது உறவினர்களால் கொடுமை |
781 | 689 | 875 |
மானபங்கம் | 803 | 892 | 1077 |
மொத்த குற்றங்கள் | 1982 | 2025 | 2421 |
எனினும் 2021 ஆம் ஆண்டிற்கான தரவு தற்காலிக எண்ணிக்கை மட்டுமே. தமிழ்நாட்டில் குற்றத்திற்கான தரவு வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள குற்ற வழக்குகளும் உயர்வு
இணையதள குற்ற வழக்குகள் காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளன. 2011-ல் இணையதள குற்றப் புகார்களின் எண்ணிக்கை 748 ஆக இருந்த நிலையில் 2021ல் 13,077 ஆக உயர்ந்துள்ளது என்றும் தமிழகக் காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.