ஒசூர் திமுக எம்.எல்.ஏ., பிரகாஷ் மகன் கருணாசாகர் உள்ளிட்ட 7 பேர் கார் ஒன்றில் பெங்களூரு அருகே சென்றுள்ளனர். மூன்று பெண்கள், நான்கு ஆண்கள் உட்பட 7 பேர் அந்த சொகுசு காரில் பயணித்துள்ளனர். கர்நாடககாவில் கருணாசாகருக்கு நிறைய பிஸினஸ் இருப்பதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் கார் சென்று கொண்டிருந்த போது, நடைபாதை காட்டன் டிவைடரில் மோதியது.
அதிலிருந்து நிலை தடுமாறிய கார், அருகில் உள்ள கட்டத்திலும் மோதிய நொறுங்கியது. KA 03 MY 6666 என்ற பேன்சி நம்பரில் இருந்த அந்த கார், முற்றிலும் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த ஒசூர் எம்.எல்.ஏ., பிரகாஷின் மகன் கருணாசாகர் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.
முதற்கட்ட விசாரணையில், காரின் முன் சீட்டில் 3 பேரும், பின் சீட்டில் 4 பேரும் அமர்ந்திருந்து தெரியவந்துள்ளது. இறந்த அனைவருமே 20 முதல் 30 வயதுடைய நண்பர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இறந்தவர்கள் விபரம்: ஓசூரைச் சேர்ந்த கருணாசாகர், அவரது மனைவி பிந்து (28), கேரளாவில் பிறந்த அக்ஷய் கோயல், இஷிதா (21), தனுஷா (21), ஹூப்ளியின் ரோஹித், ஹரியானாவைச் சேர்ந்த உத்சவ் ஆகியோரின் சடலங்கள் தற்போது, செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் உள்ளது.
7 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இறந்தவர்களில் சிலர் பெங்களூரு கோரமங்களாவில் (koramangala) உள்ள ஜோலோ ஸ்டே பிஜியில் வசித்து வந்தனர். இந்த விபத்து வழக்கை ஆதோக்தி போக்குவரத்து காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசராணை செய்து வருகின்றனர்.