புதுச்சேரி: புதுச்சேரி அருகே உள்ள திருக்கனூர் பகுதிகளில் தொடர்ந்து வாழைத்தார்களை திருடி வந்த பெயிண்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருக்கனூர் பகுதிகளில் வாழைத்தார்கள் திருட்டு
புதுச்சேரி அருகே உள்ள திருக்கனூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைதார்கள் தொடர்ந்து திருடு போனது. இந்த நிலையில் விவசயிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் புகார்களின் பேரில், திருக்கனூர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், காவல் ஆய்வாளர் ராஜகுமார் உத்தரவின் பேரில், உதவி காவல்ஆய்வாளர் பிரியா, பார்த்தசாரதி, காவலர் துரைகண்ணன் ஆகியோர் நேற்று இரவு வாகன சோதனை மேற்கொண்டனர்.
இரவு நேரத்தில் வாழைத்தார்களை திருடியவர் கைது
அப்போது மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை அருகே இருசக்க வாகனத்தில் வாழைத்தார்களுடன் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் கொடாத்துார், மணவெளி, புதுநகர் கிருஷ்ணமூர்த்தி மகன் வெங்கடேசன் (வயது 38) என்பதும் பெயிண்டர் வேலை செய்து வருவதும், கடந்த ஒன்றரை ஆண்டாக வாரத்திற்கு 2 முறை மாலையில் சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று அங்குள்ள விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வாழைத்தார்களை நோட்டமிட்டு, பின், அன்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று, வாழைத்தார்களை அறுத்து, புதுச்சேரி நேரு வீதி மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்று வருவது விசாரனையில் தெரிய வந்தது.
திருடி வந்த 4 வாழைத்தார்களுடன் சிக்கிய சம்பவம்
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து, வெங்கடேசனை கைது செய்தனர். மேலும், அவர் திருடி வந்த 4 வாழைத்தார்கள், இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர். பின், வெங்கடேசனை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், வாழைத்தார் திருட்டில் வெங்கடேசனுக்கு உதவிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைதார்கள் திருடியவர் சிக்கிய சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாய நிலங்களில் சிசிடிவி கேமரா
விவசாய நிலங்களில் சிசிடிவி கேமரா (CCTV Camera) அமைப்பது தற்போது மிகவும் பயனுள்ள பாதுகாப்பு முறையாகி வருகிறது. குறிப்பாக திருட்டு, மிருகங்கள் புகுதல், நீர்ப்பாசன வசதிகள் கண்காணிப்பு போன்றவற்றில் இது உதவுகிறது.
விவசாய நிலத்தில் சிசிடிவி அமைப்பதின் நன்மைகள்:
1. திருட்டு தடுப்பு: பயிர்கள் (வாழை, மாம்பழம், தேங்காய் போன்றவை), உபகரணங்கள், இயந்திரங்கள் திருடப்படுவதைத் தடுக்கும்.
2. மிருகங்களின் அத்துமீறல் கண்காணிப்பு: காட்டு மிருகங்கள் அல்லது கால்நடைகள் வயலுக்குள் நுழைவதை கண்காணித்து தடுக்கும்.
3. 24 மணி நேர கண்காணிப்பு: இணைய இணைப்புடன் (Wi-Fi / 5G SIM) கேமரா அமைத்தால், மொபைல் போன் மூலமாக எப்போதும் காணலாம்.
4. ஆதாரம் சேமிப்பு: திருட்டு அல்லது சேதம் நடந்தால், வீடியோ ஆதாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.