தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் கலைவாணன். இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அங்கயற்கண்ணி. 20. கலைவாணன் வெளிநாட்டில் தான் சம்பாதித்த பணத்தை அங்கயற்கண்ணிக்கு மாதந்தோறும் அனுப்பி வைப்பது வழக்கம். தஞ்சை மாதாக்கோட்டை சாலை பொதிகைநகரை சேர்ந்தவர் தமிழரசன். அவருக்கு வயது 29. இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். அங்கயற்கண்ணி வெளியில் செல்லும் போது தமிழரசன் ஆட்டோவில்தான் செல்வதுதான் வழக்கம் என்று கூறப்படுகிறது. இப்படி ஏற்பட்ட பழக்கத்தில் தன் குடும்ப விபரங்களை தமிழரசனிடம் அங்கயற்கண்ணி தெரிவித்துள்ளர்.


இதையறிந்த தமிழரசன் மற்றும் அவருடைய தாய், மனைவி கோகிலா, சகோதரிகள் வினோதா, சுமதி ஆகியோர் அங்கயற்கண்ணியிடம் கடனாக பணம் கேட்டுள்ளனர். பழக்கமான குடும்பத்தினர் என்பதால் அங்கயற்கண்ணி, தமிழரசனுக்கு ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், கடனுக்காக இந்த பணம் போதாது என்றும், மேலும் பணம் தேவைப்படுகிறது என்று அங்கயற்கண்ணியிடம் அவர்கள் கேட்டுள்ளனர். இதனால் அவர் தன்னுடைய இருபத்து ஆறரை பவுன் நகைகளையும் கொடுத்துள்ளார்.




பணம் மற்றும் நகைகள் வாங்கிய தமிழரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் பின்னர் அங்கயற்கண்ணிக்கு எதையும் திருப்பி தரவில்லை. இந்நிலையில் பணம் தேவை ஏற்பட்டதால் அங்கயற்கண்ணி, தமிழரசனிடம் தான் கொடுத்த பணம் மற்றும் நகைகளை திருப்பி கேட்டுள்ளார். பணத்தை கேட்கும்போதெல்லாம் திருப்பித் தருவதாக மாறி, மாறி தமிழரசனும், அவரது குடும்பத்தினரும் இழுத்தடித்தனர். இதனால், அங்கயற்கண்ணி குடும்பத்திலும் பிரச்னை எழுந்துள்ளது. மீண்டும், மீண்டும் அங்கயற்கண்ணி தமிழரசனிடம் பணம் மற்றும் நகையை கேட்டுள்ளார். பணத்தை திருப்பி தர மறுத்த தமிழரசன் குடும்பத்தினர் 4 பேரும் சேர்ந்து அங்கயற்கண்ணிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


இதன் பின்னரே, தன்னுடைய பணம் மற்றும் நகைகளை தமிழரசனும், அவரது குடும்பத்தினரும் இணைந்து மோசடி செய்து விட்டனர் என்பதை உணர்ந்துவிட்டனர். இதுகுறித்து, அங்கயற்கண்ணி தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசன் கைது செய்தனர். மேலும் தமிழரசன் தாய் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், இளம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். நகைகள் மற்றும் பணத்தை நம்பி கொடுத்துவிட்டு தற்போது சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்யற்கண்ணியின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு தமிழரசனும் அவரது குடும்பத்தினரும் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். தற்போது தமிழரசனை கைது செய்து விட்டோம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். பணம், நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண