புதுச்சேரியில் பியூட்டிபார்லர்குள் புகுந்து அங்கு வேலை செய்து வந்த பெண்ணை நபர் ஒருவர்  பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி சின்ன வாய்க்கால் வீதியில் அமைந்துள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வருபவர்  தொட்டம் பாளையம் பகுதியை சேர்ந்த அழகு மீனா. இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கணேசனுக்கும் அழகு மீனாவுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.


மேலும், கணேசன் மது போதையில் அழகுமீனாவை தாக்கியதாகவும் கூறப்படுகின்ற நிலையில் இன்று காலை சின்ன வாய்கள் பகுதியில் உள்ள அழகு நிலையத்திற்கு வந்த கணேசன் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த அழகுமீனா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அவரது முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் காயம் அடைந்து. உடனடியாக அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அங்கு கணேசன் வந்த சிசிடிவி காட்சிகளை வைத்து  தற்போது விசாரணை மேற்கொண்டு கைது செய்துள்ளனர். அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் பெண்ணை அங்கேயே வந்து குடும்பத் தகராறு காரணமாக அவரது கணவரே அவர் மீது பெட்ரோல் ஊற்றி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு அழகு மீனாவின் கணவரை போலீசார் கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கணேசன் குடிபோதையில் அங்கு பெட்ரோல் கேனுடன் வந்த காட்சி அங்குள்ள சிசி டிவியில் பதிவு செய்துள்ளது. அந்த பதிவை கொண்டு போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அழகு நிலையத்தில் பணிபுரிந்த அழகுமீனா மீது பெட்ரோல் ஊற்றிய சம்பவத்தை அடுத்து அவர் தற்போது அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அழகுமீனாவின் கணவர் கணேசனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர