ஆர்யன்கானின் ஜாமின் மீதான வழக்கு விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஆர்யன்கான், அனன்யா பாண்டேவுடன் நடத்திய வாட்ஸ் அப் சேட் கசிந்துள்ளது. அந்த வாட்ஸ் அப் உரையாடலின்படி, ஷாருக்கானின் மகன் போதைப்பொருள் தொடர்பாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது. 


அனன்யா பாண்டேவுக்கு, ஆர்யன்கானுக்கும் இடையேயான வாட்ஸ் அப் சாட்டில் போதைபொருள் தொடர்பாக பலவற்றை பேசுகின்றனர். அந்த சேட்டானது 2019ம் ஆண்டே நடந்துள்ளது. இருவருமே போதைப்பொருள் தொடர்பாக பேசியுள்ளனர். அந்த சேட்டில் இடம்பெற்றுள்ள சில..





அனன்யா:  இப்போது நான் அந்த வேலையில் உள்ளேன்


ஆர்யன்: நீங்கள் கஞ்சா வாங்கினீர்களா?


அனன்யா:  நான் பெற்றுக்கொண்டேன்


ஆர்யன்: கஞ்சாவா


அனன்யா: கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. டிமாண்டாக உள்ளது. 


ஆர்யன்: நான் உன்னிடம் இருந்து ரகசியமாக வாங்கிக் கொள்கிறேன்


அனன்யா: அப்படியென்றால் சரி.


இன்னொரு வாட்ஸ் அப் சாட்டில் ஆர்யனும் அவரது நண்பர் ஒருவரும் ஆகஸ்ட் 2021ல் பேசியுள்ளனர்.


 ஆர்யன்: நாளை கொக்கைன் கிடைக்குமா?
ஆர்யன்:  நான் உங்களிடம் இருந்து வாங்குகிறேன்




வெளியான வாட்ஸ் அப் தகவலின்படி ஆர்யன்கான் வழக்கில் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் போதை தடுப்புப்பிரிவினர். ஜாமின் கிடைக்காமல் சிறையில் உள்ள ஆர்யன்கானுக்கு கசிந்த இந்த வாட்ஸ் அப் சேட்டுகள் மேலும் சிக்கலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக, மும்பை சொகுசுக் கப்பல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு தொடர்ந்து விசாரணையில் உள்ளார். இதற்கிடையே கைதின்போது ஆர்யன் கானின் போனை கைப்பற்றிய காவல்துறை அவரது போனில் போதைப் பொருள் வாங்கியது தொடர்பான உரையாடல்கள் இருப்பதாகத் தெரிவித்தது. 2018-19 காலக்கட்டத்தில் நடிகர் அனன்யா பாண்டேவுடன் ஆர்யன் கான் போதைப்பொருள் தொடர்பான மொபைல் உரையாடலில் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் அதில் இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்திருந்தது.


இதையடுத்து அனன்யா பாண்டேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையில் அவர் தான் எந்தவித போதைப்பொருளும் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் யாருக்கும் சப்ளை செய்யவும் இல்லையென்றும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் ரேவ் பார்டி நடைபெற உள்ளதாகவும் இதில் போதைப் பொருட்கள் பயன்படுத்த உள்ளதாகவும் கடந்த மாதம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சொகுசுக்கப்பலில் அதிரடி சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் ஆர்யன்கானை கைது செய்தனர்