'ரேப் சீனில் நடிக்க ரெடி ஆகி விட்டாயா?' என்று பெண்களை ஆபாசபடம் எடுத்து கைதான சினிமா இயக்குநர், பெண்ணுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைதான இயக்குநர்
சேலத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்ததாக சினிமா பட இயக்குனரான வேல்சத்ரியன் மற்றும் அவரது உதவியாளரான ஜெயஜோதி ஆகியோரை சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதில் வேல்சத்ரியனுக்கு 38 வயதாகிறது. அவரது உதவியாளர் ஜெயஜோதி 23 வயது இளைஞர் ஆவார். அவர்களிடம் இருந்து 30-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள், மடிக்கணினி, கேமராக்கள் மற்றும் பென் டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை இவர்கள் வலையில் சிக்கிய 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இரண்டு ஆடியோக்கள்
இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாயாரிடம் கைதான வேல்சத்ரியன் பேசுவது போன்ற ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், தற்போது மற்றொரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிதாக வெளியாகியுள்ள அந்த ஆடியோவில், இயக்குனர் வேல்சத்ரியன் ஒரு இளம்பெண்ணுடன் பேசுகிறார். அதில், அந்த பெண்ணை ஆபாச வீடியோ எடுக்க, வன்கொடுமை காட்சியில் நடிக்க சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுவது போன்ற உரையாடல் உள்ளன.
ஆடியோவில்…
அந்த ஆடியோ பதிவில் இருவரும் பேசிக்கொண்டது பின்வருமாறு.
இயக்குநர்: உங்க டாடி என்ன சொன்னாரு. நீ போனதுக்கு அப்புறம் போன் பண்ணி என்ன ஏதுன்னு என்னிடம் நொய், நொய்னு கேட்டுட்டு இருந்தாரு.
இளம்பெண்: போய்ட்டு பத்திரமா வான்னு சொன்னாரு…
இயக்குநர் : நீ ரெடியாகிட்டியா?
இளம்பெண்: ஹ்ம்ம்.
இயக்குநர்: என்ன சீன் குடுத்தாலும் நடிப்பியா? ரொமான்ஸ், கிஸ், லிப் டூ லிப்பு… அதெப்டி கரெக்டா பண்ணுவ, ரேப் சீன்லலாம் நடிப்பியா?
இளம்பெண்: ரேப் சீன்லலாம் நடிக்க மாட்டேன்.
இயக்குநர்: எல்லாத்துக்கும் ம்ம்… ம்ம்… ன்னு சொன்ன, இது மட்டும் வேணாமா? நான் பண்ணட்டுமா...?
இளம்பெண்: ம்ம்… சரி.
இவ்வாறு அவர்கள் அந்த ஆடியோவில் பேசி உள்ளார்கள்.
காவலில் எடுத்து விசாரணை
ஆடியோவில் உள்ள பெண்ணிடம் பேசி மயக்கியது போல பல பெண்களையும் அவர் ஆபாச படம் எடுத்து சீரழித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் சிறையில் உள்ள இயக்குநர் வேல்சத்ரியன் மற்றும் அவரது உதவியாளர் ஜெயஜோதி ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் விரைவில் மனுத்தாக்கல் செய்ய போலீஸ் அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்